பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை உட்காரப் பனம்பழம் வீழ்ந்தது S3

பிரம்மானந்தமாக இருந்தது. அவர்கள் இருவருக்கும் தாகத் தினால் நாவறண்டு போயிருந்தது. ஆனாலும் அந்த இடத்தின் இனிமையினால் தாக வறட்சி குறைந்து தோன்றியது. அவர்கள் போய் அந்தத் திண்ணையின் மேல் உட்கார்ந்ததுதான் தாமதம். அதற்குள்ளிருந்த சத்திரத்தையர் புன்னகை பூத்த இனிய முகத்தோடு வந்து அதிதிகளுக்குச் சிறிது தூரத்தில் நின்றார். அவரைக் கண்ட திவான் சாமியார், ‘சுவாமிகளே! தாகத்திற்குக் கொஞ்சம் சுத்த ஜலம் கொடுக்க செளகரியப்படுமா?’ என்று கேட்டார். அதைக்கேட்ட சத்திரத்தையர் உவப்போடும் மரியாதையாகவும் விநயமாகவும் பேசத் தொடங்கி, ‘சுத்த ஜலமும் இருக்கிறது. இன்னம், நீர்மோர், தயிர். ஸத்துமா, இளநீர், கற்கண்டுப் பானகம், நெல்லிக்காய், வெள்ளரிப்பிஞ்சு, பால் முதலியவைகளும் சித்தமாயிருக்கின்றன, உங்களுக்கு எதேது தேவையோ, அவைகளைக்கொணர்ந்து தருகிறேன்” என்றார்.

அதைக்கேட்ட திவான் சாமியார் அந்தச் சத்திரத்தின் புதுமையான ஏற்பாட்டைக் கண்டு ஒருவாறு வியப்பும் சந்தோஷமும் கொண்டவராய் ஐயரை நோக்கி, வேறு எதுவும் எங்களுக்கு வேண்டாம். சுவாமிகள் எங்களுக்குக் கொஞ்சம் சுத்த ஜலம் கொடுப்பதே போதுமானது” என்று கூறினார்.

உடனே சத்திரத்தையர் உள்ளே போய், பளிச்சென்று தேய்க்கப்பட்டிருந்த தாமிரச் செம்பு நிறையத் தண்ணிரையும், எடுத்துப் பருக இன்னொரு பாத்திரத்தையும் கொணர்ந்து, சாமியார்களுக்கு எதிரில் வைத்தார். அந்த ஜலத்திலிருந்து விளாமிச்சம்வேர், ஏலக்காய், பாதிரிப்பூ முதலியவற்றின் இனிய மனம் குபிரென்று வீசியது. திவான் சாமியார் செம்பைக் கையால் தொடவே, அது பனிக்கட்டி போடப்பெற்றது போல ஜிலிரென்று குளிர்ந்திருந்தது. திவான் சாமியார் அந்தச் செம்பிலிருந்த ஜலத்தில் அரை பாகத்திற்குமேல் பருகிவிட்டார். அதைப் பருகியது அவருக்கு அந்த வெயிலிலும், தாகவிடாயிலும், அமிர்தத்தையே பருகுவதுபோல இருந்தது. செம்பில் மிகுதி இருந்த ஜலத்தை உதவிச் சாமியார் அவர்களது வழக்கப்படி இரண்டாவதாக எடுத்துப் பருகினார்.

சத்திரத்தையரது லலிதமான இனிய தன்மையைக் கண்ட திவான் சாமியார் மிகுந்த களிப்பும் திருப்தியும் அடைந்து