பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 ' ஹைதர் கலாபு காலத்தில் ரீமுஷ்டம் விருத்தாசலம் இந்த இரண்டு தலங்களில் இருந்த சுவாமிகள் யாவும் மயூரநாதசுவாமி கோயிலில் இருப்பதால் நைவேத்தியம் நடத்திவர ............ நாள் 1க்கு 15 பணம்வீதம் சுவாமி அவ் விடம் இருக்கிற வரைக்கும் கொடுக்கும்படி உத்தரவு' காட்டு மன்னார் கோயில் நீராஜகோபால சுவாமி பந்தநல்லூரில் வந்து இருப்பதால் பூசைக்காக நாளொன்றுக்குப் பணம் 5 வீதம் அவ்விடத்தில் இருக்கிற வரையிலும் கொடுக்கும்படி உத்திரவு'." பஞ்சநிவாரணப் பணிகள் செய்யுங்கால் எடுத்துச்செல்லும் பண்டங் கட்குச் சுங்கவரி நீக்கப்பட்டது. இது, "1780 கலாபுக்காகக் கொண்டுவரும் சாமான்களுக்கெல்லாம் வரி வாங்குவ தில்லை என்று உத்திரவாகியிருக்கிறது" என்பதால் அறியப்பெறும். திப்புசுல்தானின் மக்கள் இருவர்-ஒருவன் 10 வயதுடையவன்; மற்றும் ஒருவன் 7 வயதுடையவன் - தஞ்சைக்கு வந்தனர் என்றும், அவர்கள் ரெஸிடெண்டு ராமன் (ராம்) என்பவரின் பக்கத்து வீட்டில் தங்கினர் என்றும் ஒரு ஆவணக்குறிப்பு உள்ளது."சு அணையைப் பழுது பார்த்தல் தஞ்சை வளமாக இருப்பதற்குரிய காரணம் காவிரிப் பாய்ச்சலேயாகும், என்பது யாவரும் அறிந்ததே. பெருவெள்ளம் வருங்கால் காவிரியணை யிலும், காவிரியின் இரு கரைகளிலும் உடைப்பு ஏற்படுவதுண்டு. ஹைதர் படை எடுத்தபோது அணையை உடைத்துவிட்டான் என்று தெரியவருகிறது." அதைப் பழுதுபார்க்க ஆள்கள் அனுப்பப்பெற்றபொழுது ஊரார்தடைசெய்தனர் என்றும், பின்னர் "திருச்சினாப்பள்ளிக்குப்போய் ......சாயபு. டிப்பு சாயபு அவர்களிடத்திற்போய்......... வாங்கிக்கொண்டு வந்து மண் வெட்டிப்போட்டுத் தஞ்சை நகரம் வந்து சேர்ந்தோம்' என்ற குறிப்பால் ஹைதர் அவர் மகன் டிப்பு ஆகியோருடைய ஒப்புதலின்பேரில் உடைப்புக்கள் அடைக்கப்பட்டன என்பது பெறப்படும். எப்பொழுதுமே நவாபும் இந்த உரிமையைத் தாம் உடையராய் இருந்து அனை பழுதுபார்க்கும் பொழுது தஞ்சை அரசுக்குத் தொல்ல்ை கொடுத்து வந்தவராகவே தெரிகிறது. கும்பினியாரும் தஞ்சை அரசர் பக்கலில் இருந்துகொண்டு அணை உடைப்பு கரை உடைப்பு ஆகிய வற்றைப் பழுதுபார்க்கும் உரிமை தஞ்சை அரசுக்கே உரியதாக இருக்க வேண்டும் என்று வாதாடியுள்ளனர். 18. 3.170,171 19, 8-151 19.அ. 5.584, 585 20, 6-280 21, 6.281 22(3) Pages 3 and 4: Memoirs of the King of Tanjore to the Directors of the Honourable the East India Company :