பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-- 97 "1-3-1862 கண்டியின் இரண்டாவது இராணி பரலோகம் அடைந்த தற்காக உத்தரகிரியைக்கு ரூ. 1000 கொடுத்த விஷயமாகக் கடிதப்போக்கு வரவு அனுப்பியிருக்கிறது. மேற்கண்ட ராணியின் கோரியைக் கட்டுவதற்கு ரூ. 150 கொடுக்கப் பட்டிருக்கிறது. "நான்காம் ராணியின் முதல் ஸ்வீகாரபுத்திரன் இரா மச்சந்திர ராஜா என்பவருக்குக் கோரிகட்ட ரூ.100 கொடுத்திருக்கிறது" என்ற ஆவண்க்குறிப்புக்களால்" கண்டிராஜா(விக்கிரமசிங்கருக்கு) நான்கு மனைவியர்கள் இருந்தமை உறுதியெய்துவதோடு இரண்டாவது இராணியும் தஞ்சையில் இறந்தார் என்பது தெரியவருகிறது. கடைசி இராணி 1863இல் தஞ்சைக்கு வந்ததாகத் தெரிகிறது". கண்டியினின்று அரசாங்கக் கைதிகளாக வேலூரில் இருந்தவர்கள் ஏன் தஞ்சைக்கு வந்தனர் என்பது தெரியவில்லை. "பாராண்டு பகடேறி' அரசச்செல்வத்தில் திளைத்துப் பெருமித வாழ்வு வாழ்ந்தவர்கள் தம் முன்னைய பெருமைக் கேற்ப வாழ்வதற்குரிய இடம் தம்மோடு ஒத்து, அரசிழந்தும் பெருமித வாழ்வு வாழ்ந்த மராட்டிய மன்னர்க்குரிய தஞ்சையே பொருத்தமாக இருத்தல் கூடும் என்று கருதித் தஞ்சைக்கு வந்து தங்கி யிருந்தனர் என்று கொள்ளலாம். ரஷ்ய இளவரசர் தஞ்சைக்கு வருகை: கி. பி. 1841இல் ரஷ்ய இளவரசர் ஒருவர் தஞ்சைக்கு வந்ததாகத் தெரிகிறது". அவருடைய பெயர் "அலேகளிஸ்ஸாலடமாப்' என்றுள்ளது. வேறு செய்தி எதுவும் தெரியவில்லை. 36. 1–112, 118 37. The last surviving queen moved to Tanjore from Vellore in 1863. P. 51, para 58, Political Pensioners and Stipendiaries-Manual of Administration of the Madras Presidency, Vol. 1, 1885. 38, 2-268 13