பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 கொழும்பு கவர்னர் தஞ்சைக்கு வந்தால் ரெஸிடெண்டு சொல்கிறபடி மரியாதை செய்யலாம் ' என்று 15-5-1822 தேதியிட்ட ஒரு ஆவணம்' குறிப்பிடுகிறது. 15-9-1828இல் கொழும்பு கவர்னர் நாகப்பட்டினத்துக்கு வந்ததாகவும், அவருடன் மூன்று அலுவலர்கள் வந்ததாகவும், நீடாமங்கலத்தில் தங்கி வருவர் என்றும், பல்லக்குத் தூக்கிகள் மூன்று சதை ஆட்களும் சாமான்கள் தூக்கிவர 10 காவடிக்காரர்களும் வேண்டும் என்றும், ஸர்க்கேல் சிரஸ்தேதாருக்கு எழுதியதாக ஓராவணம் கூறுகிறது." அவர் கோட்டைக்கு வந்தபொழுது 15 குண்டுகள் போடப்பட்டன. கி. பி. 184fக்குரிய குறிப்பொன்று, "சிலோன் கவர்ன்மென்ட் பென்சின் ஜாபிதா' என்றிருப்பதால் இலங்கையிலிருந்து ஓய்வூதியம் பெறும் இலங்கை அரசமரபைச் சேர்ந்தவர்கள் தஞ்சையில் இருந்தனர் எனத் தோன்றுகிறது. கண்டி பென்ஷன் தாரர்கள் : கி. பி. 1816இல் ஆங்கிலேயர் கண்டியைக் கைப்பற்றினர். விக்கிரமசிங்கர் என்ற அரசரை அப்பதவியினின்று நீக்கி அவரையும் அவர் தாயையும் அவரது நான்கு மனைவியரையும், ஐம்பது பேருடன் சென்னைக்கு ஒரு படகில் அனுப்பி விட்டனர். பின்னர் அவர்கள் யாவரும் வேலூருக்கு அனுப்பப் பெற்றனர். மேலும் 44 பேர் தஞ்சைக்கு அனுப்பப்பெற்றனர். இவர்களெல்லாம் முதற்கண் அரசாங்கக் கைதிகளாகவே கருதப்பெற்றுப் பின்னர் அரசரைத் தவிர்த்து மற்ற யாவரும் எங்கும் செல்ல அனுமதிக்கப்பட்டனர்." 10-8-1842இல் கும்பகோணம் சபாபதிபிள்ளை என்பவர், சென்னைக் கவர்னர் லார்டு எல்ஃபின்ஸ்டன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் வேலூரி னின்று கண்டிய மகாராஜா அவர்களின் தாய் தஞ்சை நகரம் மகர நோன்புச் சாவடிக்கு வருங்கால் அந்தச் சவாரியில் சேர்ந்து வந்ததாகக் கூறுகிறார்?". எனவே மேலே கூறிய விக்கிரமசிங்கரின் தாய் தஞ்சைக்கு வந்தமை இதனான் அறியப்பெறுகிறது. விக்கிரசிங்கருக்கு ஒரு தம்பி இருந்தார். அவர் பெயர் கீர்த்திசிம்மராஜா என்பதாகும். இவரது பெரிய தாயார் அதாவது கண்டி இரண்டாவது இராணியின் மகளுக்கு ராஜரத்தின சிம்மள கமுசலாதேவி என்பது பெயர். இக் கமுசலாதேவி 1889இல் இறந்தார். அன்றியும் மேற்கண்ட கண்டி அரசர்களின் தகப்பனார் "அப்பானுறனேந்திர சுவாமி ராஜா' என்பவர் 1859இல் இறந்தார். இவ்விருவருக்கும் கோரி அமைக்கவேண்டும் என்று 31-5-1878இல் கீர்த்திசிம்மராஜா தஞ்சாவூர் "கவர்ன்மெண்டு ஏஜெண்டு துரை" அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்:அ. 31, 5–58 32. 2-97, 98 33. 2–288 34. Page 51, para 58, Political Pensioners & Stipendiaries-Manual of Administration of the Madras Presidency, Vol. 1, 1885. 35, 6.386 35.அ. 6-189, 190