பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 எட்டையபுரம் ஜமீன் எட்டையபுரம் பாளையக்காரருடன் நட்புறவு இருந்ததாதல் வேண்டும் என்று 1811க்குரிய ஆவணக்குறிப்பால் அறியப்பெறும்." ஆரணி ஜாகீர் முதலாம் சிவாஜி இறந்தபிறகு ஆரணி தஞ்சை மராட்டியர் ஆட்சிக்கு உரியதாயிருந்தது. இரண்டாம் துளஜா 20-10-1771இல் நவாபுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி ஆரணி தேவனூர் முதலியவற்றை நவாபுக்கு அளிக்க வேண்டியதாயிற்று. 1776 இல் ஏற்பட்ட ஒப்பந்தப்படிக்கு ஆரணி தஞ்சை அரசுக்குக்கொடுக்கப் பெறவில்லை". ஆனால் கி. பி. 1795க்கு உரிய ஆவணம் ஒன்று, - - - “ பூரீமகாபூரீமந் சத்திரபதி சாயேப் அவர்களுக்குச் சிநேகிதரான அபிநவ பூர்ண பிரியமுள்ள வெங்கடராவ் பூநீநிவாஸ்ராவ் ஆரணி தேசத்தார் ராம்ராம். என்னுடைய ஜாகீரை எனக்குச் கொடுக்கும்படி வங்காள தேசத்திலிருந்தும் சீர்மையிலிருந்தும் எழுதிவந்து ஸம்பாஜி பண்டிதர்பிள்ளை விரோதம் செய்து கொண்டு வந்தார்கள். ஏழையின்பேரில் பூர்ண கிருபை கடாட்சத்துடன் டிை ஜாகீரை நம்முடைய சுவீதானம் செய்ய வேண்டியது" என்றுள்ளது". - இதனால் ஆரணி ஜாகீர் தஞ்சை அரசுக்கு உரியதாய்விட்டது என்றும், இதனை மேற்கண்ட பூரீநிவாசராவ் தமக்குத் தரவேண்டும் என்று கேட்டுக் கும்பினி மேலாளர்கள் இசைவு தந்துவிட்டனர் என்றும் தெரிகிறது".அ. மேலும், "1797 ஆரணி ஜாகீர்தாருடைய வரவு செலவு கணக்கு ' என்ற குறிப்பால்" அமர்சிங்கர் ஆட்சியின் இறுதியிலும் ஆரணி ஜாகீர் தஞ்சைக்கு உரியதாயிருந்ததாகக் கொள்ளுதல் பொருந்தும். உரிமை எவ்வளவினது என்பதை உறுதிப்படுத்த வேறு சான்றுகள் இல்லை. இலங்கை - கண்டி, கொழும்பு 1777க்குரிய ஆவணக்குறிப்பால் இலங்கையோடு வாணிகத் தொடர்பு இருந்தமை அறியப்பெறும் " 25, 2-52 26. P. 62, A History of British Diplomacy in Tanjore, K. Rajayyan 27. P. 88, Do. 28. 1-7 28s. An agreement taken by John Hollered, President and Governor in Council from Streenivasa Row, Heir of Tremul Row, Jagirdar of Arni Dated 20–6–1780, Page XII, XIII - Appendix to the Maratha Principality by Hicky, 29, 1-260 30. அடிக்குறிப்பு க்ேகுரியது காண்க: 1–147, 148, 149