பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

l 16 4-8-1821 சூரிய கிரகணம். 5-3-1821 கப்பல் கட்டுதல் கப்பற்படைக்குரிய பொருள்கள் வைத் திருத்தல் ஆகிய செயல்களுக்குரிய ("Navy Dockyara') கப்பல் துறையகத்தை மன்னர் பார்த்தார். கப்பலின் நீள உயரம் அகலம் ஆகியவற்றுக்குத் தகுந்தபடி ஒரு பள்ளம் : சுற்றிலும் படிகள் வேலை செய்யும் ஆட்கள் இருந்து வேலை செய்வதற்குரிய விசாலமான இடம்: பள்ளத்தின் மேற்குப்புறம் கங்கை நதியின் தண்ணிர் வருவதற்குரிய வழி தண்ணீர் வராமல் தடுக்கப் பலகை மழையி னாலும் ஊற்றினாலும் தண்ணீர் தேங்கினால் இறைப்பதற்குக் குழாய்கள். வேலை முடிந்ததும் திறந்துவிட்டால் பள்ளத்தில் தண்ணிர் நிறைய் வரும். இங்ங்னம் கப்பல் கட்டும் இடத்தையும் பார்வையிட்டார் மன்னர் பெருமான்.ே 8-8-1821இல் மன்னர் கல்கத்தாவினின்று புறப்படக் கவர்னர் ஜெனரல் அவர்களிடம் விடைபெற்றார். கவர்னர் ஜெனரல் மன்னருக்கு ஒரு துப்பாக்கி, கடிகாரம், தங்க முலாம் பூசிய வெள்ளி ஹெளதா, கங்கா யமுனா என்ற பெயருள்ள ஒரு தந்தமுள்ள யானை, பலவிதமான மரங்களின் விதைகள் ஆகியவற்றைப் பரிசிலாகக் கொடுத்து, அத்தர் பன்னிர் வெற்றிலைப்பாக்கு இவற்றையும் கொடுத்து விடையளித்தார். பின்னர் பூரீராம்பூருக்கு மன்னர் சென்று காகிதம் செய்யும் இடத்தையும், ஆங்கிலம், பிரஞ்சு, பார்சி, மராட்டி, குஜராத்தி, தெலுங்கு, தமிழ், பங்காலி, நாகரம் முதலிய எழுத்துக்களைத் தயாரிக்கும் இடமும், அவற்றைக் கொண்டு அச்சிடும் இடத்தையும் பார்த்தார். 9-8-1821இல் படகேறிச் சென்று வெடி மருந்துச் சாலையை மன்னர் பார்த்தார்; வெடிமருந்து தயார் செய்யும் வகையையும் கண்டார். பித்தளை குண்டுகளைப் போட்டு மூன்று பீரங்கிகளில் வெடித்துக் காட்டப்பெற்றது. அன்றிரவு அங்கேயே இருந்து, 10-3-1821 மறுநாட்காலை கயைக்குப் புறப்பட்டார் மன்னர்,88 H, FF) ULI காசிக்குச் செல்பவர் காசியாத்திரை முடித்துக்கொண்டு கயைக்குச் செல்வதே பெருவழக்கு. சரபோஜி காசியை அடைவதற்கு முன்னரும் காசி யிலிருந்து திரும்பிய பின்னரும் ஆக இருமுறை கயைக்குச் சென்று தங்கி இருந்தார் என்பதை 24-4-1821, 4-5-1821, 22-5-1821, 24-4-1821, 4-11-1821 ஆகிய தேதியிட்ட எழுத்துச் சான்றுகளால் அறிய வருகிறது. இன்றைய தினம் ஹாஜுரின் சவாரி கயைக்கு வந்தது. நாளை முதற்கொண்டு 'கயாவர்ஜனம்" தொடங்கும். ஹாஜாரானவர் "அஷ்டகயை' 32, 5–153. 33, 5–158, 158