பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 கூறப்பட்டுள்ளது." 1820க்குரிய குறிப்பொன்றும் இங்ங்னமே கூறும்.' கி. பி. 1828க்குரிய எழுத்தொன்று 31 தோட்டங்களின் பெயர்களைக் கூறுகிறது. கி. பி. 1825க்குரிய குறிப்பு 92 தோட்டங்களின் பெயரைக் கூறுகிறது'. இத் தோட்டங்கள் எல்லாம் குத்தகைக்கு விடப்பெற்றன." என்று தெரிகிறது. 10-7-1843 மாமரங்கள் 55: புள்ளி சுமார் 8500 குத்தகை ரூபா.10,' "19-5-1843 மாமரங்கள் 101; பழம் 16670 : குத்தகை ரூ. 10: மாமரங்கள் 107; பழம் 8445 ரூ.15 ரூ. 15 க்குக் கொடுக்கக்கூ டாது; 8.நாட் களுக்குள் சத்திரத்தில் விளம்பரப்படுத்தி அதிகமாகக் கேட்பவருக்குக் கொடுப்பது ' என்ற குறிப்புக்களால்' தோட்டங்களில் உள்ள மரங்களை எண்ணி அவற்றின் பலன்களைப் பார்த்துக் குத்தகைக்கு விட்டனர் என்பது தெரியவரும். முத்துக்குளிப்பு முத்துக்குளிப்பினால் மராட்டிய மன்னர்க்குப் பெருந்தொகை வந்திருத் தல் வேண்டும். "1798 : முத்துக்குளிப்பின் தொகை வந்தால் நல்லதாயிற்று. முத்துக்குப் பதிலாகத் தொகை வரவழைப்பதற்குக் கெளனருக்குப் பேஸ்ஜி கடிதம் எழுதினதற்குப் பதில் வாவில்லை. இன்னொரு கடிதம் கெளனருக்கு அனுப்புகிறது' என்ற குறிப்பு முத்துக்குளிப்பினால் முத்தோ அல்லது அதன் விலையோ பெற்றனர் என்று தெரிவிக்கிறது. முத்துச்சிப்பியும் விற்று முதல் செய்யப் பெற்றதாகத் தெரியவருகிறது. 1803 சாமிநாத செட்டியாருடைய கப்பலில் ஏற்றிய முத்துச் சிப்பி 1. துக்கு கணக்குப்படி இஸ்காடி (?) வராகன் சுமார் கூடுதல் 1723; ; ஸேக் மயாரன்கதா என்பவருடைய கப்பலில் ஏற்றிய முத்துச் சிப்பிகள் 5 துக்கு 1603 வராகன் வித்துமுதல் செய்து 100க்கு 5 வராகன்' என்ற குறிப்பால்"க் முத்துச் சிப்பிகளை எடுத்து மலாக்கா முதலிய தொலை கிழக்கு நாடுகட்கு அனுப்பிவந்தமை தெரிகிறது. கடலில் முழுகிக் சங்கு எடுக்கிறவர்களுக்கு ஆயிரத்துக்கு 12 சக்கரம் 5 பணம் கொடுக்கிப் பெற்று வந்தது என்றும், 14 சக்கரம் வேண்டும் என்றும் ஆதம் முத்துத்துரை என்பார் கேட்டுக்கொண்டதாக ஒரு குறிப்பு" உள்ளது. இதனால் முத்துக்குளித்தல் - ம. மோ, ச. 28.2 43. ச. ம. மோ. த. 28.12 44. ச. ம. மோ, ச. 25-14 SSTTS TS TSTS 00S0 S 00S TS TS TTS TS 00S00S 00S 00S000 00S00S000 -8. தொழில்கள் என்ற கட்டுரையில் (28) அடிக்குறிப்பு 7 காண்க. ---. § 120, 121 --49, 3-164