பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147 புதையல்கள் கிடைத்தமை புதையல்களும் அரசுக்குரியனவே. புதையல்கள் கிடைத்தமைக்கு மூன்று எழுத்துச் சான்றுகள் கிடைத்துள்ளன. திருவையாறு சுபா-காங்கேயநகர்" என்ற ஊர் : 6 சேர் எடையுள்ள குடம் அதில் 24 மணங்கு எடையுள்ள 7735 காசுகள் இருந்தன. அந்தப் புதையலைக் கண்டெடுத்த ஊரார் அதை அரசரிடத்தில் கொணர்ந்து கொடுத் தனர். காசுகளும் தோண்டியும் ஜிராத்கானாவில் சேர்ப்பிக்கப்பெற்றன. பின்னர் தாராசுரம் சுங்கத்துறையாரிடம் கொடுக்கப்பெற்று அவை 3 படி 4 படி செப்புத் தவலைகளாகச் செய்விக்கப் பெற்றன. இங்ங்னம் கி. பி. 1797க்குரிய ஆவணங்களில் கூறப்பட்டுள்ளன." காசுகளைச் செப்புக்குடங்களாக மாற்றியமைத்தமையால் அச் செப்புக் காசுகள் செலாவணியில் இல்லாதவை அல்லது செலாவணி ஆகாதவை என்று கொள்ளப்பெறும். திருவையாறு தாலுகாவில் மணவாளம்பேட்டை" என்ற ஊர். இது ஒரு சுரோத்திரியம். இங்குப் பாதையில் பனை மரத்தின் வேர்களை வெட்டும் பொழுது ஒரு பானையில் 56 சேர் செப்புக்காசுகள் கொண்ட புதையல் கிடைத் தது. அக்காசுகளில் முத்திரை நன்றாகத் தெரியவில்லை. அக்காசுகள் பின்னர் கலெக்டருக்கு அனுப்பப்பட்டன : கஜானாவில் (அரசாங்கப் பொருள் நிலையத்தில்) சேர்க்கப்பட்டன. அக்காசுகட்குப் பேபர்மன் காசு என்று பெயர். ஒரு நாணயத்தின் எடை ஒரு வராகன் எடை ஆகும். 12, 19-3-1827 தேதி இட்ட இரு ஆவணங்களில் இச்செய்திகள் கூறப்பட்டுள்ளன.கே கி. பி. 1846இல் கீழவீதியில் மங்களவிலாஸ்த்தைச் சேர்ந்த சமையல் செய்யும் வீட்டில் புதையல் ஒன்று கிடைத்தது. அதில் அரை புலி வராகன் 4 : 4. புலி வராகன் 20 இரண்டரைப் பணம் 45 ; ஒத்தைப் பணம் 111 இருந்தன. இவற்றின் மதிப்பு 1096: ரூ. 6 பைசா - என்று ஒரு எழுத்துச் சான்றினால் தெரியவரும்." பலவிதத் தீர்வைகள் இத்தலைப்பில் பல வரிகளின் பெயர்கள் இரண்டு குறிப்புக்களால் தெரியவருகின்றன. மஹால் சுங்கம் ' என்று குறிக்கப்பெற்றிருத்தலால்67 எவ்வெவற்றிற்குச் சுங்கவரி விதிக்கப்பட்டன என்று தெரிந்து கொள்ளலாம். 1756க்குரிய ஆவணத்தில்" சுங்கம் வசூலிக்கும் பொருள்களின் பெயர் தரப் 61. காகயேந்தார் என்பது வேறு பாடம் 62. 1-1 ச. ம. மோ. க. 19-89 63. வி.ல பேட்டை என்றும் பாடம் 64. ஒரு ஹே ன்ன பாரம் என்றும் பாடம் 65. 1.54 ச. ம. மோ, த. 28-66 66. ச. ம. மேச. த. 8-98