பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177 " பிராதுக்காரன் வெகுநாட்களாகச் சபைக்கு வருவதில்லை " " சபா மஜ்கூர் தீர்ப்பினுடைய நகல் வேண்டும் என்று எழுதியதற்கு நகல் தர முத்திரையுடைய காகிதம் கொடுத்தால் எழுதித்தரமுடியும் என்று அனாதயம் והי י " புனர் நியாயத்துக்குரிய (appeal) கெடு தவறிவிட்டபடியால் வழக்கு விசாரணை இல்லை என்று அனாதயம் ' - - என்றவற்றான் பல காரணங்கள் காட்டி வழக்குகள் அல்லது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுவந்தன என்று தெரியவரும். இந்த வழக்குமன்றங் களின் சட்டஆட்சி எல்லை தஞ்சாவூர் மட்டும் தான் எனினும் மேற்கண்ட வண்ணம் பல காரணங்களால்” வழக்குகள் அனாதயம் (disposal) செய்யப் பெற்றன. இங்ங்னம் பலகாரணங்களால் தள்ளுபடி செய்தும், இந்த வழக்கு மன்றங்களின் சட்ட ஆட்சியெல்லை தஞ்சை மட்டிலும் ஆக இருந்தபோதிலும், ' வந்த மனுக்கள் எத்தனை முதலியன குறித்து ஒவ்வொரு மாதமும் கடிதம் எழுதவேண்டும் என்று சர்கேல் பாபாஜி ராமாஜி பண்டிட் " ஆணை பிறப்பித்த போதிலும், நாடோறும் வந்த வழக்குகள் பற்றிய குறிப்பு எழுதப்பெற்’ றிருந்தபோதிலும், பொதுவாக நாடோறும் ஒரு வழக்கையே விசாரித்துத் தீர்ப்புக் கூறினர்' என்று தெரிகிறது. முத்திரித சபையில்தான் பெரும்பாலான வழக்குகள் தீர்க்கப்படாமல் தேங்கியிருந்தன." பிற்காலத்தில் குறைபாடுகள் பெருகியகாலத்து ரெஸிடெண்டின் தலையீடு இருந்ததாகவும் தெரிகிறது." " ஸர்கார் நியாயஸ்தலத்திற்கு ஒரு அப்ரதிஷ்டை உண்டாகிறது ; மேற்படி நியாயஸ்தலம் ஜனங்களுக்கு நியாயம் கிடைக்கவேனும் ; அது இல்லாமல் அந்நியாயஸ்தலமாகிறது ' என்று ரெஸிடெண்டு தன் தலையீட்டுக்குக் காரணம் கூறியுள்ளார்." சில சமயங்களில் ஒரு வழக்கு ஒரு சபைக்கு வரின் அச்சபையார் தமது சட்ட வரம்புக்கு அது உரியதல்லதாயின் வேறு உரிய இடத்தில் பிராது செய்து கொள்க எனக் கூறுவதும் உண்டு. " பாதிச் சம்பளம் கொடுக்க என நியாய சபையில் தீர்ப்பு - பதில் ஒருவனை நியமித்து அவனுக்குப் பாதிச் சம்பளம்- பெண்சாதியின் பெண் இறந்தது. ஆகையால் மீதியில் தனக்குப் பாதி 7 பணம் தரவேண்டும் என்று கேட்க, நியாய சபை மத்யஸ்தர், " நீ காயிதாவில் சேவகம் ஆகையால் காயிதா சபையில் பிராது செய்து கொள்க' என உத்தரவு." 70, 9–14 71. 9–45 72. 9-128 73. 9-18, 14, 20, 21, 27, 28, 32, 89, 40, 45, 78, 74, 75, 90, 128 74. 12-114 75, 9-10 முதலியன 76. 9-11, 28, 25, 26, 80 77. 9–88, 92, 94 78. 4-277 முதல் 282 முடிய 79. 4-279 8O. 8–63, 54 23