பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 செங்கமலம்மாள்- கோயில் ஸ்தானிகம் - இவள் மாமியார்-தாயம்மாள் - இவளுடைய தங்கை மகன் முத்துசாமி அய்யங்கார் - செங்கமலம்மாளுடைய புருஷன் தன் ஸ்தானிகத்தை முத்துசாமிக்குக் கொடுத்துவிட்டதாக ஒரு சாசனம் செய்து கொண்டான் , செங்கமலம்மாள் பேரில் முத்திரித சபையில் பிராது கொடுத்தான். இது தேவஸ்தானத்தைச் சேர்ந்த விஷயமாகையால் தேவஸ்தானக் கச்சேரிக்கு மாற்றவேண்டும் அல்லது தேவஸ்தானக் கச்சேரி யில் பிராது கொடுக்குமாறு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்ட்ாள் பிரதிவாதியான செங்கமலம்மாள்.' - ப_ மேற்கண்ட இரண்டு செய்திகளால் மேலே கூறிய நான்கு சபைகள் மட்டுமன்றிப் பிற துறையிலுள்ளவர்களும் வழக்குவிசாரணை செய்யும் உரிமை யுடையராய் இருந்தனர் என்பது புலம்படும். - மேலும் தோட்டம், ஊர் இவற்றுக்குரிய மத்யஸ்தர்கள் முன்னிலையில் ஊர் மிராசுதார்களும் விசாரிப்பதுண்டு. இதற்காதரவாகச் சுங்கந்தவிழ்த்தான்" மிராசுதார்கள் நால்வர் ஆவு சாயேப் தோட்டம் வகையறா . மத்யஸ்தம் அண்ணாஜி பண்டிதர் முன்பாகச் சுங்கம்தவிழ்த்தான் கிராமத்துக் குடிமக்கள் சிலரை விசாரித்ததாக ஓராவணம் உள்ளது." - தஞ்சாவூரும் சில ஊர்களும் தவிர்த்து மற்றெல்லா ஊர்களின் நில்வரி வசூல் கும்பினியாருக்கே உரியதாயினமையின் மற்றப் பகுதிகளின் வழக்குகளை விசாரித்தல் மராட்டிய அரசர்தம் நான்கு சபைகளுக்குரியதன்றாயிற்று. குற்ற வியல் அல்லாதன ஊர்த்தலைவர்களாலே விசாரிக்கப்பெறலாயின. குற்றவியல் வழக்குகள் விசாரணை செய்யும் அதிகாரம் கும்பினி அலுவலர்களுக்கே உரிய தாயிற்று. இது, " ரிசிடெண்டு சர்கீலுக்கு எழுதியது : 1845 டிசம்பர் 8 மெமொராண்டம் கிடைத்தது. சாளுவநாயக்கன்பட்டணம் அல்லது எந்த இலாகாவிலும் கிரிமினல் விஷயம் விசாரணை செய்யும் அதிகாரம் கம்பெனி உத்தியோகஸ்தர் களுக்குத்தான் என்று தெரிவிக்கப்பட்டது " என்ற மோடி தமிழாக்கக் குறிப்பால்" உறுதிபெறும். கும்பகோணம் போன்ற நகரங்களில் மாவட்ட நீதி மன்றங்கள் ( ஜில்லா கோர்ட்டுகள் ) ஏற்படுத்தப் பெற்றன : அவற்றுக்கு நீதிபதிகள் (ஜட்ஜ்கள்) ஆக வெள்ளையரே நியமிக்கப் பெற்றிருந்தனர். ---- - - 81. 6-106 முதல் 109 முடிய 82. சங்கந்தவிழ்த்தான்-சுங்கக் தவிர்க்கான்-இது முதற் குலோத்துங்கனுக்குரிய சிறப்புப் பெயர்களுள் ஒன்று : இப்பெயர் கருத்தட்டாங்குடிக்கு உரியதாயிருந்தது என்று 1916க்குரிய கல்வெட்டெண்கள் 281, 288 ஆல் அறியலாம் ; இக்காளில் அங்கு ஒரு பகுதிக்குச் சங்கங் தவிர்த்தான் திடல் என்ற பெயர் வழங்கி வருகிறது. * - 88. 7-842 முதல் 846 வரை 84. ச. ம. மோ. த. 5-6