பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 களை ஏற்றினார் எனவும் தெரிகிறது. 1828இல் சர்க்காரிலிருந்து கிராம்பி னால் செய்த விசிறியொன்று அனுப்பப்பெற்றது". கி. பி. 1799இல் ஒருலகஷம் வில்வார்ச்சனை நடைபெற்றது". 1834இல் சிவங்கோட்டையில் புதிதாகச் சாம்ராஜ்ய லகஷ்மியும், தைரியலசஷ்மியும் எழுந்தருள்விக்கப்பெற்றனர்." _ பெரிய கோயிலில் 108 சிவலிங்கங்கள் அமைக்கப்பெற்றுள்ளன. இது சரபோஜி மன்னர் தொண்டுகளுள் ஒன்றாகும். 1801இல் இவ் அஷ்டோத்திர சதலிங்கம் (108சிவலிங்கங்கள்)அமைக்கப் பெற்றுக் கும்பாபிஷேகம் நடைபெற்றது". ஜில்காத் தேதி 3இல் மகா கும்பா ஷேகம் மண்டலாபிஷேகம் ஆகியவற்றுக்கு 2586 சக்கரம் 2, பணம் செலவா யிற்று”. இந்த நிகழ்ச்சி 1800லேயே தொடங்கப்பெற்றதாதல் வேண்டும்". 108 சிவலிங்கங்களும் பல்வேறு இடங்களினின்று கொணரப்பெற்றனவென்று சில ஆவணங்களால் அறியப்பெறும். நரசிங்கம்பேட்டை', அம்மாப்பேட்டை". உட்ையூர், நாதன்கோயில் முதலிய ஊர்களில் இருந்த சிவலிங்கங்கள் பல வற்றையும் அகழ்ந்து எடுத்துக்கொண்டு வந்து தஞ்சைப் பெரியகோயிலில் பிரதிஷ்டை செய்தனர். இச்சிவலிங்கங்கட்கு நிலையாகப் பூசை நிவேதனம் முதலியவற்றை நடத்துவதற்குச் சரபோஜி மன்னர் ஒரு அறக்கட்டளை நிறுவினார், முதற் பொருள் 5000 புலிவராகன்; சென்னையிலிருந்த ஹாரிங்டன்"சு (Harrington) என்பவரிடம் 29-5-1802இல் வழங்கினார். அவர் ஆண்டொன்றுக்கு 100க்குப் பத்து வராகன் வீதம் வட்டி தருவதாகப் பத்திரம் எழுதிக் கொடுத்தரர்: 29-11-1802இல் 6 திங்களுக்கு உரிய வட்டி 250 புலிவராகனும் வரவு வந்தது. அது திருவாரூர்ப் புது ரூபா 875 ஆயிற்று." - == --- இங்ங்ணம் எத்தனை அரையாண்டுகள் வட்டி பெறப்பட்டது என்பது தெரியவில்லை. ஒரு தடவை மட்டும் வந்திருக்கலாம் போலும். மேல்கண்ட முறையில் வட்டி வரவு வந்தபொழுது 108 சிவலிங்கபூசைக்குத் திங்கள் ஒன்றுக்கு ரூ. 73 வீதம் செலவு செய்யப்பெற்றிருக்கக்கூடும் என்று எதிர்பார்க் கலாம். ஆனால் கிடைத்த சில ஆவணக்குறிப்புக்களைக் கொண்டு நோக்கின் மேலேகண்ட வண்ணம் அறுதிங்கள் ஒருமுறை 250 புலிவராகனோ ரூ.875 65. ச. ம, மோ, த. 2-19 66, 4-238 67. 1–248 68. ச. ம. மோ. த. 9-28 69. ச. ம. மோ. த. 2-17 70 ச. ம. மோ. க. 24-40, 24-24: 16-91 71. ச. ம. மோ. க. 14-7 72, 73. ச. ம. மோ. க. 14-7, 8 74. ச. ம. மோ. க. 14-8 74.து. 1807 : மேஸ்கர் ஹாரிங்க்டன் : இவரிடத்து 1805 இல் அக்டோபர் 8க்குச் சாமான்கள் வாங்கிய வகையில்' (ச. ப. மோ. க 47-18) என்ற குறிப்பால் ஹ ரிங்க்டன் என்பவர் சென் ஆனயில் இருக்க வெள்ளே ககார வியாபாரி என அறியலாம. . 75. 2–165; 166; 8–147, 148; 76. 3-147; 7–588, 584