பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

195 கி.பி.1779இல் தஞ்சைப் பெரியகோயில் அம்மனுக்கு(பிருஹந்நாயகிக்கு) வெள்ளிக்கவசம் 15 சேர் எடையில் செய்யப்பெற்றது."அ பெரிய கோயில் பெருமானுக்கு 16 மஹாதானங்களில்" ஹிரண்ய விருஷப" தானம் 1826இல் செய்யப்பெற்றது." உடல் நலம் குன்றியிருப்பின் பெரியகோயில் ஜ்வரஹரேஸ்வரருக்கு அபிஷேகம் பூசை புரியும் வழக்கமும் உண்டு." கோயிலில் திருவிழா நடக்கும்போது சுவாமி திருவுலாப் போகும்கால், சுவாமிக்குப் பின்னால் வேதம் வல்லார் " ஸ்வஸ்தி வாசனம்" சொல்வர் என்று அறியவருகிறது". திருமுறைகள் ஒதும் பழக்கம் இருந்திருத்தல் கூடும்; எனினும் இதற்கு மோடி ஆவணங்கள் சான்று பகரவில்லை. கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர் தாம் எழுதிய தஞ்சைப் பெருவுடையார் உலாவில் 47ஆம் கண்ணியில் வேதியர்கள் வேதமிசைப்பர் என்றும், ஒதுவார்கள் மூவர் தேவாரம் இசைப்பர் என்றும், - " வாரம் இசைவேத வாசகரும் மூவர்தே வாரம் இசைக்கின்ற மாதவரும்' என்ற வரிகளில் பாடியுள்ளார். கோயில்களில் சில பகுதிகளில் வேற்றுச் சமயத்தவர் வரக்கூடாது என்பது பொதுவாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பழக்கமாகும். கி. பி. 1797இல் ஒரு வெள்ளைக்காரன் பெரிய கோயில் விமானத்தின்மேல் ஏறினன்; அதனால் பெருமானுக்குக் கும்பாபிஷேகமும் சம்ப்ரோகூடிணமும்" செய்யப்பெற்றன என ஒரு குறிப்பு உள்ளது". வெள்ளைக்காரன் ஒருவனுடைய உருவம் தஞ்சைப் பெரியகோயில் விமானத்தில் காணப்பெறுகிறது. அதைப்பார்க்க இவ்வெள்ளை யன் ஏறினனோ என்பது தெரியவில்லை. +. கி. பி. 1801இல் முக்தாபாய் என்பவர் "அ பெரியகோயில் பெருமானுக்கு லக்ஷம் விளக்கு ஏற்றினார் எனவும், அஹல்யாபாயி சாஹேப் அவர்கள்"க ஒரு லக்ஷம் தாமரைப்பூக்களை அருச்சனை செய்தார் எனவும்" ஒரு லக்ஷம் விளக்கு 56.அ. 57. 59. 62. 5-294 16 வகையான அறக்கொடைசள் - கிலம் இருக்கை தண்ணீர் : ஆடை விளக்கு : உணவு ; தாம்பூலம் : குடை சக்கனம் ; ஜபமாலை ; பழம் ; படுக்கை; செருப்பு ; பக; தங்கம் ; வெள்ளி ( வடமொழி ஆங்கில அகராதி, மோனியர் மோனியர் வில்லியம் ஸ், பக். 1110 ) 58. தங்கத்தினால் ஆய இடபவாகனம் 4-252, 480 EO, 4-232 61. 4-210 : ச. ம. மோ. த. 8-29. தூய்மை செய்வதற்காகக் கோயிலில் செய்யும் சடங்கு 63, 4–380 63 அ. சரபோஜி 11இன் காமக்கிழத்தி 63ஆ. சரபோஜி IIஇன் மாதேவி 64. 2-168