பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

197 குபாயோ பின்னர் வரவு வந்ததாகத் தெரியவில்லை. கிடைத்துள்ள குறிப்புக் களை நோக்கின் பூசைச்செலவுக்கு மாதம் 1க்கு ரூ. 50 வீதம் ஏறத்தாழ்க் கி.பி. 1812இலிருந்து ஸர்க்காரினின்று கொடுக்கப்பெற்றுவந்தது என்பது தெரியவரும்.' கீழவாசலில் 1814இல் வெள்ளைப்பிள்ளையார் கோவில் கட்டு வதற்குக வேண்டுகோள் விடப்பட்டது." " கி. பி. 1818இல் வெள்ளைப் பிள்ளையாருக்குத் தாழம்பூ அருச்சனை "அ என்ற குறிப்பால் அக்கோயில் விரைவில் கட்டி முடிக்கப் பெற்றதாதல் கூடும். . மாரியம்மன் கோயில் மராட்டிய மன்னர் ஆதரவில் சீருற வளர்ந்தது. அங்குள்ள கோதண்டராமசுவாமி கோயிலுக்கு மொயின் ஆண்டுதோறும். ரூ. 4725-1-9 வழங்கப்பட்டு வந்தது. தெற்குவீதியில் விசுவநாதசுவாமி கோவிலுக்கு விஜயவிசுவநாதசுவாமி என்று 1835இல் பெயர் மாற்றம் செய்யப்பெற்றதுடன் அதற்கு நித்தியப்படி பூசைச் செலவுக்குத் தொகை போதாமை கண்டு எமுனம்பாபேட்டை யூரீ கோதண்டராமசாமி கோவிலுக்குரிய வருமானத்தினின்று கொடுக்கப்பட்டது.8 - இரண்டாம் சரபோஜிக்கு முன்னர் மராட்டியரின் நேர் ஆளுக்ைப்பகுதியில் இருந்த பல சிறந்த கோயில்களுக்கு மராட்டிய மன்னர் தம் ஆத்ர்வு மிகப் பெருகி இருந்தது. . திருவையாறு திருவாதி என்றே பெரும்பாலும் குறிக்கப்பெற்றுவரும். இது தஞ்சைக்கு வடக்கில் 10 கி. மீ தொலைவிலிருக்கும் ஒரு சிறந்த சிவத் தலம். ( இங்குள்ள திருக்கோயில் இந்நாளில் தருமபுர ஆதீனத்துப் பரிபால னத்தில் உள்ளது ). இத் திருக்கோயிலுக்கு அவ்வப்பொழுது மாராட்டிய மன்னர்கள் சென்று வழிபாடாற்றியுள்ளனர்." இக்கோயில் இவர்தம் நேர் பார்வையில் இல்லாதிருந்தமைக்குக் காரணம் புலப்பட்டிலது. ரீபஞ்சநதீசுவர சுவாமி சோமாஸ்கந்தமூர்த்தி அம்மனுக்குக் கல்லிழைத்த கிரீடமும் காதணியும் 1804இல் கொடுக்கப் பெற்றுள்ளன. - 77. ச. ம. மோ. க. 2-12; 17-41, 5-89 , 18-86; 18-49; 2-44 : (5-298 பார்க்க் ) 78. கீழவாசல் வெற்றி வாசல் எனப்பெறும். ஏசோஜி சஞ்சையில் வடக்கு வாயில் வழி நுழைந்து கோட்டையை வென்று கிழக்கு வாயில் வழி யே வெளியே வங்தார். ஆகவே கிழக்கு வாயில் " பத்தே தர்வாஜா " அதாவது வெற்றி வாயில் ' என்ப்பெற்றது . பக், 77. போன் ஸ்லே வம்ச சரிததிரம் (தமிழ்), தஞ்சை சரஸ்வதி மகால் வெளியீடு, 2ம் பதிப்பு 1980 (குறிப்பு: திருவலஞ்சுழி அலும வெள்ளைப் பிள்ள்ையார் சங்கிதி உண்டு; மிகச் சிறப்புடையது.) - - == 78 ஆ. வெள்ளைப் பிள்ளையார் குறவஞ்சி என்ற நூலால் வெள்ாேப்பிள்ளையார் கோயில் நாயக்கர் காலத்தக எனறும், இங்குக் கட்டுதல் ' என்பது புதுப்பித்தல் ஆகலாய என்றும் சிலர் கூறுவர். - * - 79. 2-255 (64இல் 24) 79 அ. 1-172 80. 4-288 . 81. ச. ம. மோ. த. 4-40 82. ச. ம. மோ. க. 2-28, 45 83 ச. ம. மோ, த, 8-86