பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

237 சங்கீத ரத்னாகரம் (சம்ஸ்கிருதத்தில்)" இந்துஸ்தானி மொழியில்; மூலம் சாரங்கதேவர் " சங்கீத தர்ப்பணம் " தாமோதரர் எழுதியது சங்கீத மகரந்தம்" i சங்கீத ரத்னாகரம் தெலுங்கு எழுத்து " சங்கீத சுதாகரம்" - ஹரிபாலர் எழுதியது சங்கீத தீபிகா " தெலுங்கு எழுத்தில் சங்கீத கமுக்தாவளி ' தேவண்ணாசார்யர் - இந்நூல்கள் யாவும் தஞ்சை மராட்டிய மன்னர் கற்றுணர்ந்தனராதல் கூடும், சிவானந்த நட்டுவனர் தஞ்சாவூரில் நாட்டியம் கற்றுக்கொடுப்பதில் வல்லவர்களும், தஞ்சை யிலும் பிற இடங்களிலும் சிறப்புற வாழ்ந்தவர்களும், சுப்பராய ஒதுவார் என்ற நட்டுவாங்கம் வல்லவரின் மக்களும் ஆகிய பொன்னையா, சின்னையா, சிவானந்தம், வடிவேலு ஆகியவர்களில் சிவானந்த நட்டுவனாரைப் பற்றி ஒரு ஆவணம்"அ கிடைத்துள்ளது. சிவானந்தம் தஞ்சைப் பெரிய கோவிலில் நட்டு வாங்க வேலையில் இருந்தபொழுது இரண்டாம் சிவாஜியின் மகள் ராஜஸ்ா பாயி அம்மணி ராஜேசாயேப் அவர்களுடைய திருமணம் நடந்தது. அத் திருமணத்துக்குச் சிவானந்தம் சென்றிருந்தார். அப்பொழுது அரசர் தஞ்சை யிலுள்ள தேவதாசிகள் எல்லோருக்கும் ஹிந்துஸ்தான் நாட்டியமும் கர்நாடக நாட்டியமும் கற்றுத்தரவேண்டும் என்று பணித்தார். அதன்படி சிவானந்தமும் அவர் உடன்பிறப்பினர் மூவரும் சேர்ந்து இரவும் பகலும் இடைவிடாது நாட்டியம் கற்றுக் கொடுத்தனர். எனினும் சிவானந்த நட்டுவனாரை ஹாஜுர் முன்னிலையில் நாட்டியம் செய்யக்கூடாது என்று பெரிய கோயில் மத்யஸ்தர் ( அலுவலர்) தடைசெய்து விட்டார். அதனால் சிவானந்தம் முன்போல் அரசர் முன்னிலையில் நாட்டியம் ஆடுவதற்கு அனுமதி தரல் வேண்டும் என்று 10-10-1844இல் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்." இவ்வாவணத்தி லிருந்து சிவானந்தம் மேற்குவீதியில் வசித்து வந்தவர் என்றும் தெரிய வருகிறது." 195 12-257, 258, == 196 யாதவ அரசர் இரண்டாம் சிங்கனன் காலத்தவர் (1210-1247 ) 197. 12–258 198. 12-258 எண் 2895) இசை வகையுள் ஒன்றாகிய பிரபந்தங்களேப் பற்றிக்கூறுவத. * In the musical parlance a prabandha denotes a composition with specific characteristics" - P. 271, Tanjore as a seat of Music. 199, 12 - 260 (எண் 2858) 200, 12 - 260 (எண் 2897) 201, 12 - 262 (எண் 2859) 202, 12-268 எண் 2860) 202.அ. பிற்சேர்க்கையில் இவ்வாவணம் கொடுக்கப்பட்டுள்ளது. 203.204, 4-268, 264,

  • *