பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 சரஸ்வதிமகாலில் இவ்வாவணத்தினை மொழிபெயர்த்தவர் சிவானந்தம் சிதம்பர நட்டுவனாரின் குமாரன்' என்று எழுதியுள்ளார். தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் நியமிக்கப்பட்டிருந்த மொழிபெயர்ப்பாளர் பரமானந்தத்தின் மகன்' என்று மொழி பெயர்த்துள்ளார். ஆனல் தஞ்சையில் நட்டுவாங்கத்தில் வல்லுநராக இருந்த நால்வரின் தந்தை சுப்பராய நட்டுவனார் என்று கருதப் படுகிறது." தந்தை பெயர் ஒத்துவரவில்லை. ஆவணத்தின்படி நோக்கினால் நால்வரும் 1840-1845இல் தஞ்சையிலிருந்தவராகவே தோன்றுகிறது. நால்வரும் இரவும் பகலும் நட்டுவாங்கம் சொல்லிக் கொடுத்தார்கள். சின்னையா மைசூர் சமஸ்தான வித்வான் ஆக இருந்தார் வடிவேலு திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தார். பொன்னையா முத்துசாமி தீகூசிதரின் தாசராக இருந்தார். சிவானந்தம் சிவாஜியின் ஆதரவு பெற்றவராய்த் தஞ்சைப் பெரிய கோவில் நட்டுவாங்கம் உடையராய் இருந்தார். இந்நால்வரும் வெவ்வேறு இடங்களில் இருந்தவராகவே தோன்றுகின்றனர். ஆகையாலும், தந்தைபெயர் மாறுபட்டிருப்பதாலும், சிவானந்தம் என்ற பெயர் ஒற்றுமையாலும் சகோதரர் நால்வர் என்றமை கொண்டு சுப்பராய நட்டுவனாரின் மகன் இந்த ஆவணத் தில்கண்ட சிவானந்தம் என்று கொள்வது பொருந்துமா என்று ஐயம் தோன்று கிறது. எங்ங்ணமாயினும் இரண்டாம் சிவாஜி காலத்தில் நட்டுவாங்கம் வல்ல ஒருவர் வாழ்ந்தார் என்பதும், அவர் சிவானந்தம் என்ற பெயரினர் என்பதும், அவர் பலருக்கு ஹிந்துஸ்தானி கர்நாடக நாட்டியங்களைக் கற்றுத்தந்தார் என்பதும் உறுதி. 205 படி 242, Tanjore as a sea of Music; கால்வர் - பொன்னையா, சின்னையா, சிவானந்தம், வடிவேலு.