பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 "9ஆம் நம்பர் பையன்களுக்கு எழுத்துத் தெரியும்; அமரம் 2 சுலோகம் தெரியும் 15பேர்" ஆக 118 பையன்கள். ட என்ற குறிப்புக்களால் மாணாக்கர்களைத் தரம் பிரித்து அமைத்து அன்னோர் படித்துள்ள பாடங்களைக் கூறியுள்ளமையின் மாணாக்கர்களைத் தரம் பிரித்துப் பாடம் புகட்டிவந்தனர் என்று ஊகித்தறியலாம். பெரும்பாலும் ஆசிரியர்களுக்கு அரசே ஊதியம் அளித்து வந்ததாதல் வேண்டும். அவர்களுடைய மாத ஊதியம் 3 சக்கரம் முதல் 22 சக்கரம் வரையில் இருந்தது. வில்லியம் பரங்கி ஆங்கிலம் சொல்லிக் கொடுத்தவன் 21 சக்கரம் அளிக்கப்பட்டான், பார்சி ஆசிரியருக்கு 11 சக்கரம் ; தெலுங்கு சொல்பவ னுக்கு 4 சக்கரம் ; ஒவியனுக்கு 3 சக்கரம்" நான்கு வீதிகளிலும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் இருந்தன." அங்குப் பெரும்பாலும் படித்தவர்கள் பார்ப்பனர் அல்லாதவரேயாவர் என்று தோன்று கிறது. மாரியம்மன் கோயிலுக்குப் போகும் பாதையில் உள்ள பள்ளிக்கூடத்தில் 65 வயதுடைய சொக்கலிங்கம் என்ற ஆசிரியர் பணி செய்தார் எனவும், அவரிடம் படித்த மாணாக்கர் 31 பேர் எனவும், அவர்களுடைய வயது பெயர் விவரமும் ஓராவணக் குறிப்புக் கூறுகிறது. ஆசிரியர்க்கு மாதச் சம்பளம் ரூ. 3-1-0 என்றும், ஓராண்டிற்குள் சில்லறையாக ரூ. 12-9-0 கிடைக்கும் என்றும், " ஒரு மாணவன் பள்ளியில் படிப்பதிலும் எழுதுவதிலும் நல்லவிதமாக வருவதற்கு 5 ஆண்டுகள் தேவைப்படும் ' என்றும் தெரிகிறது." டபீர் குளத்துக்குப் போகும் பாதையில் ஒரு பள்ளி இருந்தது. இதில் மானாக்கர் பதின்மூவர்; இங்கிருந்த ஆசிரியர் குப்பையாண்டிப் பிள்ளை இவரும் மேலே கூறிய சொக்கலிங்கம் பிள்ளை போல மாணாக்கரிடமிருந்து சம்பளம் பெற்றுக் கொண்டு பாடம் சொல்லி வந்தவர் ஆவர்." டபிர் குளத்துக்குப் போகும் பாதையில் போலீஸ்காரரின் வீட்டருகில் நமச்சிவாய வாத்தியார் என்பவர் சொல்லிக் கொடுத்த பள்ளியிருந்தது. அவரிடமிருந்த மாணாக்கர் 14 பேர். இந்த ஆசிரியர்க்கு மாதந்தோறும் கிடைத்த தொகை ரூ. 4 ஆண்டொன்றுக்குக் கிடைத்தது ரூ. 1-8-0. இங்குப் படித்தவர்கள் நல்ல தேர்ச்சிபெற ஆறு ஆண்டுகள் ஆகும் என்று கண்டுள்ளது.' வடக்கு வாசலுக்குக் கிழக்கில் கோந்தளக்காரனுடைய வீட்டுக்கருகில் சிறுவர்கட்கு ஒரு பள்ளியிருந்தது" 8. ச. ம. மோ. த. 8-88 9. 11-16; 87 10, 1.816 , ச. ம. மோ, க. 8-5;2-48 11. 10-117, 118 12, 10-119 13. 10-119 __ 14. 10–121 15. கோந்தளக்காரன். அம்மன் பேரில் பாட்டுப்பாடுகிறவன் 16. 1-880