பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

253 கி. பி. 1829இல் ஆறுமுகம் பிள்ளையிடம் இருந்து தமிழ்ப் புத்தகங்கள் ரூ. 20 அளித்து வாங்கப்பெற்றன". இதே ஆண்டில் காசியிலிருந்து காசித் தம்பிரான் அவர்கள் வழி ரூ. 299க்குப் புத்தகங்கள் வாங்கப்பெற்றன.' o வராஹப்பையாவிடம் வாத்தியங்கள் கற்றுக்கொள்பவர் வழி வாத்திய நூல்கள் ரூ. 6க்கு வாங்கப்பெற்றன". ஆங்கிலப் புத்தகங்கள் பலவும் வாங்கப்பெற்றன. 18-7-1821இல் காசியிலிருந்து இரண்டாம் சரபோஜி தாம் எழுதிய மடலில் டுரியன் (Turin) என்பவர் இடமிருந்து ஒரு பெட்டி புத்தகங்கள் வருகின்றன என்றும், அப் புத் தகங்களை இளைய திவானிடம் அளிக்கவேண்டும் என்றும் குறித்துள்ளார்." புத்தகங்கள் வாங்கப்பெற்றன.' கி. பி. 1829இல் இங்கிலீஷ் ஜான்ஸன் அகராதி 3 பிரதிகள் ரூ. 74க்கு வாங்கப்பெற்றன.' -- இந்த நூல்நிலையம் மராட்டிய அரச பரம்பரையினரின் உடைமையாகை யால் இந்நூல் நிலையத்தை வளர்ப்பதில் அன்னேர் கண்ணுங்கருத்துமாய் இருந்தனர். - 1841இல் ரிஸிடெண்ட் மூலம் சென்னையிலிருந்து ஆப்பிரிக்கப் படப் புத்தகம் (Atlas) நான்கு பிரதிகள் வாங்கப்பெற்றன." புதுச்சேரி முத்துசாமிப் பிள்ளையிடமிருந்து 11ஆவது நிகண்டு அச்சிட்டது 8 பிரதிகள் வாங்கப் பெற்றன.' கல்கத்தாவில் 1846இல் வெளியிடப்பெற்ற லார்ட் பிஷப் பாதிரியின் சரித்திரம் 12 பிரதிகள் வாங்கப்பெற்றன. -- 1-11-1860இல் உடையார்பாளையம் சாமாசாரியருடைய நூல்கள் சரஸ்வதி மகாலில் சேர்க்கப்பெற்றன." 1853இல் சரஸ்வதி பாண்டாரத்தில் ஆங்கில நூல்கள் வைப்பதற்கு ஜிரத்கானாவில் மூர்த்தி இருக்கும் மண்டபத்தில் தெற்குப் பக்கம் சுவரையடுத்து 123. 4-229 124. 4-280 125. ச. ம, மோ, த. 4-24 125. 5-127; 85; இளைய திவான் - இளவரசராகிய சிவாஜி 127. 2-199 128. ச. ம. மோ. த. 4-24: கி. பி. 1842இலும் ஜான்ஸன் இங்கிலிஷ் அகராதி வாங்கிய தாக அறியவருகிறது : ச. ம. மோ. த.1-160; 129. ச. ம. போ. த. 8.85 130 2-264, 265. 131, ச. ம. மோ, த. 5-8 -132. 8-172