பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 இவற்றால் வேதம் படியெடுத்தல் வேதசாலையில் நிகழ்ந்ததென்றும், 1000 கிரந்தத்துக்கு 1 சக்கரம் வீதம் அளிக்கப்பெற்றது என்றும் போதரும். " சரஸ்வதி பாண்டாரம் ஓலைச்சுவடி கந்த புராணம் சம்பவ காண்டம் தமிழ் எழுத்து ஒலைகள் 358க்கும் பாடல்கள் 1712, பணத்துக்கு 60 பாடல்கள் வீதம் 29, பணம் ' என்றொரு குறிப்பு உள்ளது.' ஸ்காந்த புராணம் யுத்தகாண்டம் நாகரி லிபியில் 1829இல் படியெடுக்கப் பட்டது.' தமிழ்க் கந்தபுராணம் யுத்தகாண்டமும் படியெடுக்கப்பட்டது." . பாளோபந்து (முராட்டி) புஸ்தகம் ஸ்மிருதி சந்திரிகா விவஹார காண்டம் 3 பேர்கள் பிரித்துக்கொண்டு படியெடுத்தனர். அத்யாத்ம ராமாயணமும் படியெடுக்கப்பட்டது.' கந்த புராணம் அசுர காண்டம் தமிழ் படியெடுக்க 3 சக்கரம் 1; பணம் 153 அளிக்கப்பெற்றது. - * +". 1830இல் பாளோபந்து நூல்கள் அக்னேசுவர மகாத்மியம், பஞ்சநத மான்மியம், சந்திரகலாரத்னம், எஜுர்வேத பாஷ்யம் ஆகியவற்றைத் தனித்தனி ஒவ்வொருவர் படியெடுத்தனர். ' யோகவாசிஷ்டம் நிர்வாக பிரகரணம், டிை உத்தரார்த்தம், டிை நகர கண்டம், பவிஷ்யோத்தர புராணம் ஆகியனவும் எழுதப்பெற்றன.: - ஒலைப் புத்தகங்கள் எழுதியவர்களின் பெயர்களும் காணப்படுகின்றன: ஒலைப் புத்தகங்கள் மட்டும் அன்றிக் காகிதங்களில் எழுதுபவரும் இருந்தனர். இத்துறையிலேயும் தகுதியுடையவராயின் தந்தைக்குப் பிறகு மகன் அவ்வேலையை ஏற்றிருத்தலைக் காண்கிறோம். " காகிதப் புத்தகம் எழுதும் கோவிந்தாசாரி இறந்து விட்டார். அவருக்குப் பதிலாக அவர் மகன் கிருஷ்ணாசாரி வாசுதேவாசாரிக்கு வயது 32, மாதம் 3 ரூபா ' என்பது இதற்குச் சான்றாகும். கி. பி. 1844இல் கிரந்தம் 1000க்கு ரூ. 2 வீதம் எழுத்துக்கூலி கெடுத்த தாகத் தெரிகிறது. இதனை, 'பாகவதம் தசமஸ்கந்தம் வியாக்கியானம் மட்டும் எழுதிய வகையில் கிரந்த எண்ணிக்கை 1862; 1000க்கு ரூ. 2 வீதம் கொடுக்க உத்தரவு" என்ற குறிப்பான் அறியலாம். 148. ச. ம. மோ. த. 4-44 149. ச. ம. மோ. த, 4.12 150, ச. ம. மோ. த. 4-18 151, 152. ச. ம. மோ, த. 4.12 153. | 4-14 154. ச. ம. மோ. த. 5-27 155. 4–9 156. ச. ம. மோ, த, 7.29 157, 5-11 158. ச. ம. மோ. க. 2-41 159. ச. ம. மோ. த. 18.99