பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

265 சர்வமானியங்கள் அளிக்கப்பெற்றன." இதில் கண்ட ஷாமா பண்டிதர் என்பது இசைவல்ல சியாமா சாஸ்திரிகளைக் குறிப்பதாக இருக்கலாம். 1777இல் கோவிந்தராவ் போசலே என்பவருக்குத் திருவலஞ்சுழி மாகாணத்தில் 14 அடிக்கோலால் நிலம் வேலி 32, மா 3 அளிக்கப்பட்டது. கி. பி. 1786இல் பாளம்பட் அவர்கட்குத் திருப்பூந்துருத்தி வைத்தியநாதம் பேட்டையில் ஒரு வேலி, 8 மா சர்வமானியம் அளிக்கப்பெற்றது. சதாசிவ பாண்ட்யா என்பவருக்குத் திருப்பூந்துருத்தி பெரமூரில் 5 வேலி அளிக்கப்பெற்றது." இரண்டாம் துளஜாவின் ஆட்சியிறுதியில் முகமதியர்கட்கும் நிலக் கொடை நேர்ந்தம்ை பற்றிப் பல குறிப்புக்கள் உள்ளன. ஸேக் உஸ்மானின் தம்பி ஸாகின.ஸா ஃபக்கீர் என்பவருக்குப் பசுபதிகோவிலிலும், ஹஜரத் படேசா புரானி ஸ்ேக் ஹாலேன் சாயேபுக்குப் பட்டீச்சுரம் மாகாணத்திலும் இரண்டு கிராமங்கள் அளிக்கப்பட்டன." கோட்டைக்கு வெளியே ஒரு மசூதி கட்டப்பெற்றது. அதற்கு விளக்குக்கு எண்ணெய், வருஷத்துக்கு ஒருமுறை திருவிழா, ஃபகீர்களுக்கு உணவு இவற்றுக்காகச் சாலியமங்கலத்தில் அனாதி தரிசு நிலம் 12648 குழி கொடுக்கப்பட்டது. அப்பகுதிக்கு மஹமத்புரம் என்றும் பெயரிடப்பட்டது." இனி ஆண்டு குறிப்பிடப்பெறாமல் துளஜாராஜா காலத்து நிலக்கொடை பற்றிய செய்திகள் சில உண்டு. அவையாவன : கோபால தீகூழிதருக்குத் திருப்பூந்துருத்தியில் 14 வேலி 3 மா அளித்தமை, தொண்டைமான் போஸ் லேக்குக் கும்பகோணம்-சோழவரம் மாகாணம்-பூமி நன்றாக விளையாதது, 44; வேலி அளித்தமை, கவிசுவரர் வெங்கட சுப்பையாவுக்கு 1: வேலி 3 மா; சதாசிவபட்டுக்குத் திருப்பூந்துருத்தி வைத்தியநாதம் பேட்டையில் 24 வேலி, கிருஷ்ண பாகவதருக்குத் திருப்பூந்துருத்தியில் 13 வேலி 3மா-என்பனவாம்." கி. பி. 1796 , அமர்சிங்கின் காலம் , திருவையாற்றில் காவேரியின் இக்கரையில் சத்திரத் தருமத்திற்காகக் கும்பகோணம் - இன்னம்பூர் தென் பாதியில் 6 வேலி 3 மா சர்வமானியம் அளிக்கப்பட்டது.' அமர்சிங்கு பதவி நீக்கம் செய்யப்பெற்றதும் இரண்டாம் சரபோஜி அரசு கட்டில் ஏறினார். இவர் கி. பி. 1813இல் ஜான் பாதரிக்கு 1322; குழி நிலம் இனாம் வழங்கினார். இதற்குரிய ஆணையில் நிலத்தின் எல்லையும் விவரிக்கப்பட்டுள்ளது.' 34. ச. ம. மோ.த. 6.46 35. 6-194, 195 36, 4–867 37. 2-298 3H. 2-810 39, 2-811 40. ச. ம. மோ. த. 5-12 41, 1–91 42. 8–146