பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 நோய்க்குக் தகுந்தவாறு மருந்து கொடுத்து வந்தான். இவனுக்கு மாத ஊதியம் 9 சக்கரம். இவன் மருத்துவத்தில் தகுதியுடையவன் ஆகையால் (யானைகள் இறந்தமையைக் கருத்தில் கொள்ளாது) பெரிய மனம் வைத்து 9 சக்கரம் சம்பளம் கொடுக்க வேண்டியது' என்றுள்ளது. இந்நாட்டு வைத்தியர்கள் 1824இல் யானை வைத்தியம் செய்தவர் காசிம் கான்." 1856இல் யானை வைத்தியம் செய்தவர் வீரவாகு என்பவர் ஆவர்." == குதிரை வைத்தியம் செய்தவர் காசிம்கான் மீராகான். இவர் 182627இல் இருந்தவர் ; கி. பி. 1859இல் சைத் மொகிதீன் என்பவர் வைத்தியம் செய்பவராக இருந்தார். 1858இல் திரியம்பக ராவ் லகஷ்மண் ராவ் ஜகதாப் என்பவர் இருந்தார்." இரண வைத்தியம் செய்பவர் வையாபுரி வைத்தியர். இவர் இரண வைத்தியம் செய்ய ஆயுதங்களைத் திருச்சியினின்று 12 புலிவராகனுக்கு வாங்கினார். வைத்தியம் குட்டிப்பா என்று ஒருவர் குறிப்பிடப்பெறுகிறார். இவர் தன் பேரனின் பூணுால் கல்யாணத்துக்கு இனாம் பெற்றிருத்தலின் இவர் அந்தணராதல் கூடும். 1858இல் வைத்தியர் சாமி சாஸ்திரி சுப்பு சாஸ்திரி என்று ஒருவர் பேசப்பெறுகிறார்." வைத்தியம் சிதம்பரம் பிள்ளை என்றொருவர்க்குப் பத்துச் சக்கரம் ஊதியம் ; இதை 17 சக்கரமாக்க வேண்டும் என்று 1814இல் ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.' --- - வைத்தியர் மஸ்தான் என்றும் ஒருவர் 1821இல் பேசப்பெறுகிறார்.டி 1827இல் விஷ வைத்தியம் செய்தவர் இராமசாமி அய்யர் என்பவர் ஆவர். 1858இல் சிதம்பரசாஸ்திரி நாராயணசாமி என்பவர் இருந்தார்.'அ பரங்கிப்பேட்டை சிங்கு வைத்தியர் மகன் நமச்சிவாய வைத்தியருக்கு 1829இல் மாதம் ஒன்றுக்கு ரூ. 50 ஊதியம் தரப்பெற்றது." 3. 4-448 4. 1-250 5. 4-204, 427 ; ச. ம. மோ, த. 2-20 6. 4-458 7, 1–250 8. 2-199 9. 2-42 10. 1-250 11. ச. ம. மோ. க. 2-11 12. 2–29 13. 4-205; 1828இல் வேலாயுதக்கவிராயர் என்பவர் விஷரோக சிகிச்சை என்ற நூலை எழுதினார். இது 505 பாடல்களால் ஆனது. சரஸ்வதி மகால் வெளியீடு எண் 52 (1956) 13.அ. 1-250 14, 4–281