பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 உடன்கட்டை யேறுதல் கணவன் இறப்பின் மனைவி உடன் உயிர் நீப்பது பற்றிப் பல செய்திகள் தமிழ் இலக்கியத்திற் காணப்பெறும். தமிழிலக்கணங்களாகிய தொல்காப்பியம், புறப்பொருள் வெண்பா மாலை முதலியவற்றுள்ளும் இதுபற்றித் துறைகள் சிலவற்றை இவ்விலக்கண நூலார் வகுத்துள்ளனர். கணவன் இறப்பின் விதவை யிடும்பையை வெறுக்கும் மகளிர் கணவனோடு உடன்கட்டை ஏறுதல் ஒரு பழமையான ஒழுகலாறு. இதனை ஸதி' என்றும், "சக கமனம்' என்றும் கூறுவர். உடன்கட் டையேறிய மகளிரைப் பற்றி இலக்கியங்களிலும் வரலாற்றிலும் பல செய்திகள் உண்டு. தஞ்சை மராட்டிய அரசர் காலத்தில் மராட்டிய அரசர்களின் மாதேவிகள் சிலர் உடன்கட்டை ஏறினர் எனப் போன்ஸ்லே வம்ச சரித்திரம் என்ற நூலினின்றறியப்பெறும். முதலாம் சரபோஜி 1710 முதல் 1728 வரை ஆட்சி புரிந்தவர். அவர் கைலாஸ்வாஸி" ஆனபொழுது அவருடைய மூன்று மனைவிகளில் சுலகூடினா பாயி சாகேயும், ராஜஸ் பாயி சாகேபும் உடன்கட்டை ஏறினர்." கி. பி. 1739 முதல் 1763 வரை ஆட்சி செய்தவர் பிரதாப சிங்கர். அவருக்கு மனைவியர் ஐவர். அவர் சகம் 1763இல் இறந்தார். அவருடைய மூன்றாவது மனைவியான யமுனா பாயி சாகேயும், ஐந்தாவது மனைவியான சக்வார் பாயி சாகேயும் உடன்கட்டை ஏறினர்." 1. இலக்கியக் கேணி - கே. எம். வேங்கடராபையா, பக்கம் 97 முதல் 111 வரை, (1968) 2. போன் ஸ்லே வமிச சரித்திரம் , தமிழ் - பக்கம் 88 3 ■ r பக்கம் 82 4. H ** பக்கம் 116