பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 "1862 : தஞ்சாவூர் ஆக்டிங் கவர்ன்மெண்டு ஏஜெண்டு ஜி. எஸ். மாரிஸ் அவர்களுக்கு மாதோபூரீ கோரி லகஷ்மிபாயி அம்மா, ஹானரபிள் கவர்னர் செய்து கொடுத்த மொயின் மாதம் ரூ. 150 வீதம் காரியஸ்தர் கோபால ஸ்வாமி மோஹிதே இவர்களின் மூலம் பெற்றுக்கொண்ட வகையில் இரசிது" என்ற குறிப்பினால்' மங்கள விலாஸ் மாதரார் ஒவ்வொருவருக்கும் திங்கள் 1க்கு ரூ. 150 வீதம் அளிக்கப்பெற்று வந்தமை உறுதி எய்தும். 1. மங்கள விலாஸ் மாதராருக்கு உதவியாகச் சில அலுவலாளர்கள் இருந்தனர் என்பது மேற்கண்ட "காரியஸ்தர் கோபாலசாமி மூலம் பெற்றுக் கொண்டேன் ' என்றமையால் அறியவரும். ஓர் ஆவணத்தில்," மிமோ மங்கள விலாஸம் காரியஸ்தர்களுடையவும் அம்மாமார் களுடையவும் பெயர் ' என்று குறிப்பெழுதிக் "காரியஸ்தர்கள்' பதினால்வச் பெயர் தரப்பட்டுள்ளது. இதன்கண் அம்மாமார்கள் என்பது மங்கள விலாஸ் மாதர்களைக் குறிக்கும். அவர்களைப் " பாயி" என்றும் 'அம்மா' என்றும் வழங்குவதுண்டு." * - மங்களவாஸ் மாதரார் சிலருக்குக் குழந்தைகள் இருந்தனர். கி. பி. 1848இல் இருந்த மங்கள விலாஸம் குழந்தைகள் பின்கண்டவர்களின் பெயர் தரப்பெற்றுள்ளது:" - - விஜய - சதானந்தஜி'க விஜயகாமானந்தஜிக விஜய வீர்யானந்தஜி விஜய மோகானந்தஜி விஜய வரதானந்தஜி'அ விஜய நாகானந்தஜி விஜ யீஸ்வரி பாயி - விஜய நந்தம் பாயி விஜய சம்வர்த்தனி பாயி விஜய பூரீநாயகி பாயி விஜய பூரீராம் பாயி விஜய வரதாம்பா பாயி விஜய வரதவல்லி பாயி விஜய சித்தவல்லி பாயி மேலும் சில ஆவணக்குறிப்புக்களில் இப்பெயர்களோடு வேறு பெயர் களும் காணப்படுகின்றன; ஓரிரு பெயர்கள் விடுபட்டுள்ளன." ஒவ்வொரு குழந்தையின் பெயருக்கும் " விஜய' என்ற அடைமொழி கொடுக்கப் 14. ச. ம. மோ. த. 25-25 15. 6-899 16. The Mangala Vilas ladies were described as ." Boi" and "Ammal" - p. 266, Deposition of Ramachandra Rao - D. W. 32 in the Subordinate Judge's Court, Tanjore, dated 28–9–1916; O S. No. 26 of 1912 17. ச. ம. மோ. த. 8-19 17.அ. இவர்கட்கும் மேலும் சிலருக்கும் ஆசிரியராகக் திகழ்ந்தவர் ராமச்சந்திர ராவ் - D. W.32, Deposition, p.266 18. ச. ம, மோ. க. 8-19 -