பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

333 பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. மங்கள விலாஸ் குழந்தைகட்கு " விஜய ராஜேபூரீ' என்று குறிப்பது அந்நாளைய வழக்கு." மங்கள விலாஸ் மாதாாருக்குப் பிறந்த குழந்தைகளுக்கு " ஜாதகர்மம் நாமகரணம் சூர்யாவலோகனம்கே அன்னப் பிராசனம்" முதலிய சடங்குகள் நடைபெறுவதுண்டு. 1848இல் பார்வதிபாயி சத்யபாமாபாயி ஆகியோர்க்குக் குழந்தைகள் பிறந்தபொழுது ' புண்னியாவாசனம் முடிந்ததும் ஆவு சாயேப் செள. சைதம்பா பாயி சாயேபு இவர்களுக்கு நமஸ்காரம் செய்துவிட்டுச் சுவாமிக்கு நமஸ்காரம் செய்து தங்கம் வெள்ளி புஷ்பங்கள் போட்டார்கள்: பாக்யலசஷ்மி பாயி,திருஷ்ணா பாயி குழந்தைகள் மேற்கண்ட விதம்' என்றுள்ள ஒரு குறிப்பால்" எல்லாச் சடங்குகளும் மங்கள விலாஸ் மாதராரது குழந்தை கட்கும் நடைபெற்றன என்றறியப்பெறும். ஆனால் மகாராஜா மனையில் உட்கார்ந்து இவற்றை நடத்துவது இல்லை என்று தெரிகிறது." இரண்டாம் சிவாஜி இறந்தபொழுது மங்கள விலாஸ் ஆண் குழந்தைகள் மூன்று பேருக்குத் தாயில்லை; மகாராஜாவின் மூத்த மனைவி (காமாட்சியம்பா பாயி) அவர்களின் பொறுப்பிலிருந்தனர் ** 21 ஒரு குறிப்பில் 1850: மங்கள விலாஸ் சாவித்திரி பாயி, கிருஷ்ண பத்ரா பாயி, லகஷ்மு பாயி, ஹரிபாயி, பாகிரதி பாயி, சந்திரரேகா பாயி ஹிரா பாயி - 12பேர் மொயின் விபரம்' என்றிருத்தலின்” 1850இல் மங்கள விலாச மாதரார் பன்னிருவர் என்றும் பின்னர்ப்பலரும் சேர்க்கப் பெற்றனர் என்றும் தோன்றுகிறது. " மொயின்' என்றமையால் இவர்களுடைய கைச் செலவுகட்குத் தொகை தரப்பட்டமையும் பெறப்படும். மங்கள விலாஸ்த்தில் நகைகள் என்ற தலைப்பில்" மங்களவிலாஸ் மாதரார் பெயர்கள் மேற்குறிக்கப்பட்டவரின் வேறாக மேலும் பன்னிருவர் பெயர்கள் 1855இல் காணப்படுகின்றன. இதனால் இச் "சத்மத்தில் அவ்வப் பொழுது சிலரும் சேர்க்கப்படலாயினர் என்பதும் தெரிகிறது. 19, . Vijaya Raje Sri is used to Mangala Vilas Children” - p. 342, Deposition of Serfoji Rajah Saheb, D. W., 39 (grandson of Sivaji II); "At the time of Maharajah’s death there were female children in Mangala Vilas” – Deposition of Yogambal, 6th witness for 1 & 2 defendents - p. 26 19.அ. சூர்யாவலோகனம் என்பதன் பொருள் சூரியனைப் பார்த்தல் என்பதாகும். • Surya avalokanam – looking at the Sun" - Deposition of M. S. Ghantigai, 1st witness for 1 & 2 defendents, o s No. 26 of 1912 20. ச. ம. மோ. த. 8-26 to so. ... When Punyahavachanam was performed for Mangala Vilas children the Rajah did not sit but was seated opposite to them ” – Deposition of Yogambal A. 7, page 47, O. S. No. 26 of 1912 21, 4–164 22. ச. ம. மோ. த. 8-14 23. ச. ம. மோ, க, 7-19