பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

365 ஏறத்தாழ இதே சமயத்தில் அதாவது 9-7-1828இல் சர்க்கார் அலுவலர்கட்கும் ஒரு எச்சரிக்கை தரப்பெற்றுள்ளது. - - I உமையாள்புரம் - அவ்விடத்தில் யாராவது தொல்லை தந்தால் சர்க்காரைச் சேர்ந்தவர்கள் அடிதடி செய்யாமல் இருக்கவேண்டும். பிறர் வந்து நாலடி அடிக்கிற வரையில் பொறுத்துக்கொள்ளவேண்டும் ; எதிர்த்துச் சண்டையிடக்கூடாது ' என்பது அவ்வெச்சரிக்கையாகும்.'அ அரச குடும் பத்தார்க்குப் புத்தாடை அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கட்குச் சில பண்டிகை நாட்களில் புத்தாடைகள் வழங்கும் வழக்கம் இருந்தமை புலப்படுகிறது. அந்நாட்கள், " நவராத்திரி, விஜய தசமி, தீபாவளி, வசந்த பஞ்சமி, ரத சப்தமி, மகா சிவராத்திரி, ஹா ஜூரின் அப்த பூர்த்தி ( பிறந்தநாள் ), காமன்பண்டிகை (ஹோலி ), மராத்தி வருஷப் பிறப்பு, நாக பஞ்சமி " என்று ஓராவணக்குறிப்பில்' உள்ளன. கையொப்பமும் முத்திரையும் சில ஆவணங்களின் தொடக்கத்தில் பரவானகி ' என்றிருக்கும். பரவானகி ' என்பது அரசன் இடும் ஆணை. இவ்வாணையில் அரசரது கையொப்பம் இருக்காது எனத் தெரிகிறது."அ கையொப்பம் இடுவதாயின் பெரும்பான்மை ' ரீராம் பிரதாப் " என்று கையொப்பம் இடுவது பழக்கம்.181 பூநீராம் பிரதாப் 'சு என்ற முத்திரையும் உண்டு. - அரசாங்க முத்திரையில் ' பிரதாப வீரகரவா ஸிரீ ' என்று தேவநாகரி எழுத்தில் இருக்கும்.' சேவகர்கள் வெள்ளிவில்லை தங்கவில்லைகள் கொடுக்கப் பெற்றிருப்பர். வெள்ளி வில்லைகளில் ரீராம் பிரதாப் ' என்றும், தங்க வில்லைகளில் வீர ரீ சிவாஜி மகாராஜா சத்ரபதி அவர் 11 களின் சுபடர்சள் என்றும் எழுதப்பட்டிருக்கும்.'" 131அ. 6-450 132. ச. ம. மோ. த. 8-48 133. 1-146, 148, 161, 162; Purvana – A written command . P. 349, Glossary, History of Jagannath Temple, Prabhat Mukherjee, Calcutta, 1977 1334. " It purports to be a parvanikai; it does not bear signature; Parvanikai huzur means personal order” – P. 9, Deposition of M. S. Ghantigai, O. S. No. 26 of 1912 134. 5–1 1344. 5-290 135. ச. ம. மோ, த. 2-14 136. ச. ம. மோ, க. 1-80, 81