பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 பிற விலங்குகள் யானை குதிரை ஒட்டகங்கள் பலப்பல இருந்தன என்பதற்குச் சான்று உண்டு. வேட்டை மகாலில் 493 விலங்குகள் இருந்தன என்றும், அவற்றுள் 9 புலிகள் என்றும் அறியப்பெறும்." கருங்குரங்குகள் இரண்டு இருந்தன வாதல் வேண்டும்.' நெருப்புக்கோழிகளும் கொணரப்பட்டன." மாடுகள் கி. பி. 1774இல் சீமையினின்று பல கன்றுக்குட்டிகள் 620 வராகன் கொடுத்து வாங்கழ்பெற்றன." ■ நாய்கள் கி. பி. 1765இல் சீமையிலிருந்து சென்னைக்கு வந்த நாய்கள் பல தஞ்சாவூர்க்குக் கொண்டுவரப்பட்டன என்று ஒரு குறிப்பு" உள்ளது. கி. பி. 1832இல் வெங்கட்ராவ் மூலம் வேட்டை நாய்கள் ரூ. 2300க்கு வாங்கப் பெற்றன."

  • சில வழக்காறுகள்

24-4-1831 : இடையன் இராமசாமி நாயக்கன் தன்னுடைய கழுத்தை அறுத்துக் கொண்ட விஷயத்தில் சிகிச்சை செய்ய வைத்தியருக்கு ரூ.15 கொடுத்துச் செலவு எழுதும்படி உத்தரவாக வேண்டும் என்று ஸர்க் கேலுக்கு எழுதியது ” என்று ஒரு குறிப்பு" உள்ளது. இடையன் ஏன் கழுத்து அறுத்துக் கொண்டனன் என்று தெரியவில்லை. மாடுகளைப் பராமரித்தல் முதலாய பணிகள் செய்தபொழுது எதிர்பாராத வண்ணம் கழுத்துக்கு ஊறு நேர்ந் திருக்கலாம் போலும். அலுவலில் இருந்தபொழுது "விபத்து' நேர்ந்தமை யால் சர்க்காரே வைத்தியச் செலவை ஏற்றுக் கொண்டதாதல் வேண்டும். அமாவாசை நாளில் பகல் 1 மணிவரையில் கச்சேரிக்கு விடுமுறை விடுவதும் ஒரு பழைய வழக்கு." ஆஜர் பார்க்காமல் பென்ஷன் வழங்கக்கூடாது ' என்று ஒரு குறிப்பால்" தெரிகிறது. இதனால் ஓய்வு ஊதியம் பெறுவோர் நேரில் சென்றே பென்ஷன்" பெறவேண்டும் என்பதும் விதியாதல் பெறப்படும். 160. 5–299 161, ச. ம. மோ, க. 5-44 162. ச. ம. மோ. க. 13-88 162அ, 8-174, 175 163. 2-9 164. ச. ம. மோ, த, 4-1 165. 1–222 166, 1–74 167. 1-114