பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 ஆவுசாகேப் ஆவுசாகேப் என்று குறிக்கப்பெற்றது இரண்டாம் துளஜாவின் தாய் ஆகிய திரெளபதியம்பாபாயி சாகேப் ஆவர். அமர்சிங்கர் பட்டம் எய்தியபின் இவர் இறந்தார். இவரது உத்தரகிரியைகளை அமர்சிங்கு தானே முரட்டுத்தனமாகச் செய்தார். சரபோஜிதான் நீத்தார்க்குரிய சடங்குகளைச் செய்யவேண்டும் என்பது சரபோஜி கட்சியின் வாதம். இது பற்றி விரிவாக வினந்தி என்பார் எழுதிய கடிதத்தில் காணலாம்."க அதன் சுருக்கம் பின்வருமாறு : நேற்றுக்கலை விடியல் ஆவுசாகேப் இறந்தார். அமர்சிங் 10 பேருடன் வந்தார். இரண்டு துரைகள் அமர்சிங்கிடம் சென்று திரும்பிச் சரபோஜியிடம் வந்து “ அமர்சிங் ஆவுசாயேப் உத்தரகிரியை செய்யவேண்டும் என்பது. கவர்னர் கெளன்சில் இடமிருந்து ஆணை " என்றார்கள். சரபோஜி " நான் தான் உரியவன் ஆவுசாயேப் கருத்தும் இதுவே ' என்ருர். இதைக் கவர்னர் கெளன்சிலுக்கு எழுதுகிறேன் என்று கூறிய பாதிரி பிரேதத்தை அமர்சிங்கிடம் தரச்சொன்னார். பாயிசாயேபிடம் இதைச் சொன்னார்கள். இதற்குள் இச்செய்தியை அமர்சிங்கிடம் வெங்கடாசல முதலி சொல்ல, அமர்சிங்கு தன் அரண்மனையினின்று வந்தார். பாதிரி சாகேப், “பிரேதத்தை அமர்சிங்கிடம் ஒப்பித்தால் நல்லது ; இல்லையேல் சத்ரபதி காரியங்களுக்குக் கெடுதி " என்றார். 3 பாயிசாயேபுகள் " அமர்சிங்கு தகுதியற்றவர் ஆவுசாயேப் எங்களை நம்பி இருந்தார். பூரீமந்த் செய்வது சரியில்லை எனில் அரண்மனை யிலேயே வைத்துத் தி மூட்டிவிடுகிறோம் ' என்றனர். எனினும் பின்னர் ஒப்புக்கொண்டனர். அமர்சிங்கு தோட்டம் சத்திரம் அரண்மனை இம்மூன்றை யும் விடமாட்டேன் என்றார். சிறிது கலகம் நடந்தது. பின் அங்கிருந்த பொருள்களை எல்லாம் எடுத்துச் சென்றார் ". so சர்கேல் சிவராவ் : அமர்சிங்கின் சர்கேல் சிவராவ் எனப்பெற்றார். இவர் மிகவும் கொடியவர். இவரிடத்தில் அமர்சிங்குக்கு மிகுந்த பற்றும் அன்பும் உண்டு. இவர் தன் பிள்ளையையும் " ரிகார்டு' அலுவலகத்தில் நியமித்தார்." அமர்சிங்கின் நாடு முழுவதையும் கும்பினியார் " ஜப்தி செய் தார்கள். அது விடுதலை செய்யக்கூடாது என்பதும் அப்படி விடுதலை, ஆனால் அமர்சிங்கும் சிவராயரும் . வெகு அநியாயம் ' செய்வர் என்பதும் சரபோஜி கட்சியின் கூற்று. சிவராயருக்கு ஒருவித அபாயமும் நேரிடக்கூடாது என்பது அமர்சிங்கின் எண்ணமாகும். அமர்சிங்கும் சிவராயரும் தம்மிடத்தும் தம் மூன்று நாட்டுப்பெண்களிடத்தும் சரபோஜி - இடத்தும் சரியாக நடந்து கொள்வதில்லை என்று ' மிஸ்தர் ஒமல் கெளனர் -அவர்க:குத் 31, 5-463 82. 3.26, 27 82.அ. 8.277 முதல் 295 வரை 83 8–108 84. 5-560 85. 7-683 == 86 Sir Charles Oakley was Governor from 1–8–1792 to 7-9-1794,