பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 அந்தணர் செய்த யாகங்கள் அக்னிஷ்டோமம் இது தலையாய யாகம், வசந்தகாலத்தில் ஐந்து நாட்களில் செய்து முடிப்பது. "அக்னிஷ்டோம ப்ருஷ்டலாமா " என்ற சாமவேத மந்திரத்தி னால் முடிவதால் இதற்கு அக்னிஷ்டோமம் என்று பெயர். திருவாலங்காட்டில் வசிக்கும் அப்பய்ய தீகூஜிதர் வழியினர் குப்பா தீகூஜிதர் கி. பி. 1824இல் அக்னிஷ்டோம யாகம் செய்திருக்கிறார். சிவராம புரியிலிருக்கும் ராமா வாஜபேயரின் தகப்பனார் இந்த யாகத்தை 1825க்கு முன்னர்ச் செய்துள்ளார்.: கி. பி. 1836இல் மந்திரிவர்ய ராஜபூரீ சதாசிவ கேசவ தீகூஜித் பண்டித் அவர்களும், அ சேனாதிபதி கிருஷ்ணாஜி கேசவ் தீகூசித் பண்டித் அவர்களும், சேனாதுரந்தரர் பிரவேகாகாரிய ராஜேழரீ சோமநாத சதாசிவ தீகூழித பண்டித் அவர்களும், சேனா துரந்தரர் ராஜேபூரீ கங்காதர ரக்மாஜி அவர்களும், சேனா துரந்தரர் வராகப்பைய தீகூஜிதர் அவர்களும், தருமையா தீகூஜிதர் அவர்களும் வெங்காஜி ரக்மாஜி தீகூஜித் அவர்களும் மேற்கண்ட யாகம் செய்துள்ளார்கள். இந்த யாகத்துக்காக " அவிஸ் "க பெறற்குரிய ஆடுகள் (பசு) விலை பற்றி மேலே குறிப்பிட்ட ஆவணக்குறிப்பு அறிவிக்கிறது. 1. ச. ப. மோ. த. 5-85 2. ச. ம.மே. த 4-8 2. 12 பக்கம் 380 3. ச. ம. மோ, த. 8.25 3.அ. வேள்வித்தீயில் தேவர்க்குக் கொடுக்கும் உணவு