பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 மிகுபெயலும் பெயலின்மையும் மழை மிகுதியாகப் பெயினும் கெடுதி பெய்யாதிருப்பினும் கெடுதியே. தஞ்சை மராட்டிய மன்னர் ஆட்சிக் காலத்தில் மிகுபெயலாலும் பெயலின் மையாலும் பெரும் பஞ்சங்கள் தோன்றின. ' கி. பி. 1776 : அந்நிய தேசத்திற்கு மழை பெய்வதற்காக வருண ஜெபம் செய்வதன் பொருட்டு' "1776 : ரீபிரஹதீஸ்வர சுவாமி கோயில் நந்திக்கு மழை பெய்ய அபிஷேக நைவேத்தியத்துக்கு" "1779 : பூரீபெரியகோயில் கந்திக்கு மழை வரவழைப்பதற்கு அபிஷேகம் நைவேத்தியம்......7 நாட்களுக்கு" "1785 : நாட்டுக்கு மழை தண்ணிர் இல்லாததற்காக வருண ஜபம் ருத்ராபிஷேகம் முக்கால் மண்டலம் கார்த்திகை மாதம் 8இலிருந்து மார்கழி மாதம் 10 வரையிலும் 33 நாள்' "1785 : வருண ஜபம் ருத்ராபிஷேகம்" "1797 : மழை பெய்வதற்காக பூரீ பெரியகோயிலிலுள்ள நந்திக்கு அபிஷேகம் செய்ய முன்னால் அபிஷேகம் செய்ததற்குக் கொடுத்தபடி 16 நாட்கள்' 1. ச. ம. மோ, த. 29-4 2. ச. ம. மோ. த. 29.6 3. ச, ம. மோ. த. 18-17 4. ச. ம. மோ, த, 7-18 5, ச. ம.மோ. த. 1-1 6. ச. ம. மோ. த, 19-40 48