பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

409 பண்டைநாள் முதல் இவ்விரு வகையினருக்கும் இடையே ஏற்பட்ட பூசல்களைத் தீர்த்து வைத்தமைக்குப் பல சான்றுகள் உள்ளன. அங்ங்னமே தஞ்சை மராட்டிய மன்னர் காலங்களிலேயும் பூசல்கள் தோன்றின. இரண்டாம் சரபோஜியிடத்தில் முறையிட்டனர். நன்மை தீமை ஆகியவைகள் நடக்கும் பொழுது ஒவ்வொருவரும் எங்ங்னம் நடந்துகொள்ளவேண்டும் என்று தீர்மானிக்கப் பெற்றது. அங்ங்ணம் ஒப்பந்தத்தின்படி " நடக்கத் தவறினால் சர்க்காருக்குச் சக்கரம் 120 அபராதம் செலுத்திச் சர்க்காரின் உத்தரவுக்கு ஆஜராகிறோம்" என்று 1830இல் உறுதிமொழி கொடுத்துள்ளனர்." தஞ்சை மேலவிதியில் பச்சண்ணா சந்தில் இருக்கும் வலக்கை இடக்கை என்னும் இரண்டு பாஞ்சாளர்கள்"அ தங்களுடைய கலியாணத்தில் புழங்கவேண்டிய முறைபற்றி ஸர்க்காரில் எழுதிக்கொடுத்த உடன்படிக்கை' ட என்ற 1843க்குரிய குறிப்பால்" இரண்டாம் சிவாஜி காலத்தில் கல்யான காலத்திய பழக்க வழக்கங்கள் பற்றி இரு சாராருக்கும் வேறுபாட்டுணர்ச்சி வந்திருத்தல் வேண்டும் என்றும், அதுபற்றி உடன்படிக்கை செய்துகொண்டனர் என்றும் தெரியவருகிறது. 1982-83இல் மோடி அறிந்த ஒருவரைக் கொண்டு மோடி ஆவணக் கட்டுக்களில் சில ஆவணங்கள் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் தமிழாக்கம் செய்யப்பெற்றன. அக் கட்டுக்களில் மோடி ஆவணங்களின் இடையே, தமிழில் எழுதப்பெற்ற சில ஏடுகள் இருந்தன. அவற்றைப் படியெடுத்துக் கொண்டபொழுது சில ஏடுகளில் வலங்கை இடங்கைப் பூசல்களைப் பற்றிய வழக்கு விசாரணையும் தீர்ப்பும் பற்றிக் காணப்பட்டன. புதுக்கோட்டை ராஜதானி, அங்கு வலங்கை இடங்கை என்கிற இரு கட்சிக்காரர்கள்; இவர்களுக்குள் நன்மை தீமை முதலியன நடத்துவதில் மனவேற்றுமை ஏற்பட்டது. இவ்வேற்றுமையைப் புதுக்கோட்டையில் தீர்த்துக் கொள்ளாமல் தஞ்சாவூரில் தீர்த்துக் கொள்வதற்குப் புதுக்கோட்டை ரெஸிடெண்டு இடம் இருந்து பரிந்துரைக் கடிதம் பெற்று வந்தனர்." வலங்கையைச் சேர்ந்தவர், 'வலங்கை பெரியதனக்காரன் நாராயணசெட்டி மகன் அளகிரி செட்டி'; இடங்கையைச் சேர்ந்தவர், ' இடங்கைப் பெரிய 4. 5–226; 227 5. இவர் இரண்டாம் துளஜாவின் அமைச்சர். 'Tuliaji's minister Baccanna Pundit revised the Dabir's grain standard in some cases......” — P. 467, Tanjore District Manual 5.அ. பாஞ்சாளர்கள் - பஞ்சாளத்தார் - பஞ்சகம்மாளர் - தட்டான், கன்னன், சிற்பன், தச்சன், கொல்லன் " (Tamil Lexicon) (" யெடங்கையைச் சேற்க்க பஞ்சானக் காற கம்மாளர் ' 8-15) - 6. 2–198 7. 8-1 முதல் 29 முடிய 8. 8-29, 26 52