பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414 இடங்கைப் பள்ளர்கள் கலியாணத்துக்கு வலங்கையின்படி செய்யலாம்: சிவப்புப்பாவாடை சிவப்புக் குதிரையும் உண்டு. பொது தவிரவும் வலங்கையைச் சேர்ந்தவர்கள் கோயில் குளம் திருவிழா ஆகியவற்றுக்குப் போவதாயின் "அவ்வச் சாதிக்குச் சொல்லப்பட்டிருக்கிற வாகன வாத்தியங்களுடன்' போகலாம்." வலங்கையைச் சேர்ந்த தொழிலாளி இடங்கையாரிடத்துச் சேவகம் பண்ணும்படி நேரிட்டால், தடையின்றிச் சேவகம் செய்யலாம். இடங்கையைச் சேர்ந்தவர்கள் வலங்கையாருக்குச் சேவகம் செய்ய நேரிடின் யாதொரு தடை யில்லாமல் செய்யலாம்.' இங்ஙனம் தமிழ்நாடெங்கனும் அவ்வப்பொழுது பூசல்கள் நடந்து வந்தன என்றும், அவ்வக்காலங்களில் அரசு தலையிட்டுப் பூசல்களைத் தீர்த்துவைத்தது என்றும் அறிய வருகின்றன. அங்ங்னமே புதுக்கோட்டை யில் நிகழ்ந்த பூசலைத் தஞ்சை சமஸ்தானத்தார் தீர்த்துவைத்தனர். இங்குக் கலியாணம் அது தொடர்பானவை பற்றிய பூசலே ஏற்பட்டது என்றும் அது தீர்க்கப்பட்டது என்றும் அறியலாம். பிற உரிமைகள்' பற்றி மோடி தமிழாக்கக் குறிப்புக்களினின்று அறிய வாய்ப்பில்லை. 23. 8-12 24. 8-18 25. தாங்கள் புறப்படவேண்டும் இடங்களுக்குப் பாதாகூைர் கோத்துக் கொள்ளவும், தங்கள் வீடுகளுக்குச் சாந்திட்டுக் கொள்ளவும்" என்பன போன்றவை - தென்னிந்திய சாஸனங்கள், தோகுதி W, எண் 888; 562 of 1888,