பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

413 மேளத்துடன் கலியாணம் செய்யலாம்; மாப்பிள்ளையும் பெண்ணும் குதிரை மேல் உட்கார்ந்துகொண்டு தீவட்டியுடன் அவர்கள் குடியிருக்கும் தெருவைச் சுற்றி வரலாம். தெலுங்க அம்பட்டன் மேற்கண்டவற்றுடன் சங்கீத மேளம் வைத்துக் கொள்ளலாம். பறையர், பறத்தெருவில் பந்தல் போட்டு அப்பந்தலுக்கு வெள்ளை சிவப்புச் சேலை கலந்து கட்டலாம்; வாழைக்கூந்தல் கட்டலாம்; பறமேளம் தப்புஅடிக்கலாம்; ஆதிரைமேல் மாப்பிள்ளையும் பெண்ணும் வைத்து வெள்ளைப் பாவாடை பிடித்து வெள்ளைக் குதிரையில் வெள்ளைக்குடை பிடித்துத் தீவட்டி பிடித்துக்கொண்டு அவர்கள் குடியிருக்கும் தெருவைச் சுற்றி வரலாம்; மேலும் வலங்கைப் பெரியதனக்காரர் வீட்டுக்குப் போவதாயின் அரண் மனையார் கூறும் வழியிலே சென்று சந்தனம் பாக்கு வெற்றிலை வாங்கிக் கொண்டு வரலாம். - மற்றவர்கள் அவரவர் விருப்பத்தின்படி வாத்தியம் பிருது வாகனங் களுடன் கலியாணம் செய்து ஊர்கோலம் வரலாம்'. எனினும் சுண்ணாம்புக் காரன், சாறாயக்காரன், உப்பிலியன் ஆகியோர் ஆனைமேல் உட்கார்ந்து ஊர்கோலம் வரக்கூடாது. +. கோமுட்டி கல்யாணத்துக்குப் பந்தலில் சிவப்பு வெள்ளைச் சேலை கட்டலாம்; வாழைக்குருத்துக் கட்டலாம்; அவர்கள் விரும்பிய ஆடை அணி கலன்கள் அணியலாம்; சங்கீத மேளம் வைத்துக் கொள்ளலாம்; ஊர்கோலம் போகும் பொழுது சர்க்கார் கூறும் பாதை வழியே போகவேண்டும். இடங்கையினர்க்கு: இடங்கை சேர்ந்த கைகாளர், பள்ளி, படையாச்சி, மறவர், மேளக் காரன் இவ்வைவரும் தாம்தாம் விரும்பியவண்ணம் மணம் செய்து கொள்ள லாம். ' தேசாசாரத்துக்கும் சாதியாசாரத்துக்கும் அனுசரித்து மாத்திரம் இருக்கவேண்டும்.' எஞ்சியுள்ளவர்களுள் பேலசெட்டி கலியாணத்துக்குப் பந்தல் வெள்ளை சிவப்புக் கலந்து கட்டிக்கொள்ளலாம்; வாழைக்கூந்தல் நெட்டிமாலைகட்டலாம்; கொம்பு, தப்பு, சங்கீத மேளம் இவற்றுடன் திருமணம் நடத்தி ஊர் கோலத்தில் சிவப்புத்துணி பல்லக்குக் கட்டித் தீவட்டி மத்தாப்பு வாண வேடிக்கைகளுடன் அரண்மனையார் கூறும் பாதை வழியே போகலாம். --- --- 22. 8–11, 12