பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412 என்றும், இரண்டாம் விசாரணையில், "அ " உங்கள் இறண்டு ககூழியைச் சார்ந்ததாயி நீங்கள் எழுதிவைத் திருக்கிறபடி 33 சாதியினரும் சுப சோபன முதலாகக் கலியாணத்துக்கு யெவ் விதம் பந்தல் போட்டு யெந்த பிருது வாகந வாத்தியங்களுடன் கலியாணம் செய்து யென்னமாய் ஊர் கோல வறுகிறது. அந்த ஜாதி விபறமாயி சொல்லுங் கோள் '20 என்றும் வினாவப்பட்டதினின்று, திருமணக்காலத்தில் பந்தல் போடுதல், வாத்தியங்கள் வாசித்தல், ஊர்வலம் வருதல், ஊர்வலத்தில் எத்தகைய ஆடை யணிகலன்களைப் பூணுதல், எந்த வாகனங்களில் ஊர்வலம் வருதல் ஆகியவுை பற்றி மனவேறுபாடு வந்திருத்தல் வேண்டும் என்று தெரிகிறது. - ---> இவர்களுக்குள் வேறுபாட்டுணர்ச்சி வந்ததால் " சுபாசுப முதலான காரியங்களில் " அவரவர் விருப்பப்படிக்கு மகிழ்ச்சியுடன் அனுபவிக்க முடியாமற் போய்விட்டது. அதனால் அவர்கள் தீரயோசித்துப் பார்த்தார்கள். மனம் வேறுபட்டிருத்தல் ' விவேகத்தாழ்வானது ' என்று அறிந்தனர். அதனால் அவர்களுடைய "கெவுறவத்துக்கும் நியாயத்துக்கும்' விரோதம் என்று தெரிந்து கொண்டார்கள். ஆகவே சமாதானம் ஆகி அரண்மனையார் செய்த தீர் மானப்படி தவறாமல் நடந்துகொள்வதாக உறுதி கூறினர். --- --- வலங்கையினர்க்குவ வலங்கை கவரைச்செட்டி தெருவாசலில் பந்தல் போடலாம்; சிவப்பு வெள்ளை சிவப்பு கலந்து கட்டலாம்; தவிரவும் பந்தலுக்கு வாழைக்குலை, நெட்டி, பாக்கு முதலானவை கட்டலாம்; நல்மேளம் பெரிய மேளம் தப்பு கொம்பு நகரா பறமேளம் தாரை சங்கு ஆகிய வாத்தியங்களை இயக்கலாம்; மாப்பிள்ளையும் பெண்ணும் பட்டு ஆடைகள் ஆபரணங்க, அணியலாம்; சதிர் நடத்தலாம்; "ஊர் கோலத்துக்கு" யானை வெள்ளைக் குதிரை பல்லக்கு இவற்றில் வரலாம். ---> வாணியன் பந்தலுக்குச் சிவப்பு வெள்ளை கலந்து கட்டலாம்; மேளம் தப்பு இயக்கலாம்; யானை குதிரையில் அவர் தெருவில் மட்டும் ஊர்வலம் போகலாம். - == சாணார், வளையன், வண்ணான், தமிழ அம்பட்டன் கலியாணத்துக்குப் பந்தலில் சிவப்பு வெள்ளை கட்டலாம்; வாழைக் கூந்தல் கட்டலாம்; பற --- 19.அ. ஆவணத்தில் உள்ளவாறு கொடுக்கப்பட்டுள்ளது. 20, 8–6, 21. 8-7 முதல் 10 வரை