பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

417 நினைவுச் சின்னம் தஞ்சைக்கு அனுப்பப்பட்டதாதல் வேண்டும். சரபோஜியின் முழுவுருவச் சிலை செய்ய 1803இலேயே முன்பணம் கொடுக்கப்பட்டிருந்த போதிலும் 1807க்குப் பிறகே அது கொண்டுவரப்பட்டுத் தஞ்சையில் ஜீராத்கானாவில் அமைக்கப்பெற்றதாதல் கூடும் என்று ஊகித்து அறியலாம். கி. பி. 1859க்குரிய மோடி தமிழாக்கக் குறிப்பு, " மகால் ஆயுதசாலையிலுள்ள சரபோஜி சிலாவிக்கிரகத்தின் முக்கோணி மரத்தினால் செய்த முண்டாசுக்குச் சிந்துார வர்ணம் கொடுக்க உத்தரவாக வேம்ை' H. ஆ) o என்றுள்ளது. இதனான் இச்சிலைக்கு வேறொரு தலைப்பாகை மரத்தினாற் செய்து வைத்திருந்தனர் என்றறியப்பெறும். அரசர் அரச மாதேவிகளின் உருவம் கி. பி. 1776க்குரிய மோடி ஆவணத்தமிழாக்கக் குறிப்பொன்றினால் அரசருக்கும் அரசமாதேவியர்க்கும் உருவம் அமைத்தல் பழக்கம் என்றும் நவராத்திரி சமயத்தில் பிற தெய்வ உருவங்களை வைத்துப் பூசை செய்யுங் கால் இவ்வுருவங்களையும் வைத்துப் பூசிப்பதுண்டு என்றும் தோன்றுகிறது. அக்குறிப்பு,"அ "1776 ஐப்பசி மாதம் நவராத்திரிக்காக சுவாமிகளுக்குப் பூஜை விவரம் He is is is so H மகிஷாசுரமர்த்தனி ...... கைலாஸ்வாஸி ரா. பெரிய மஹாராஜா, செள. யமுனாபாயி சாஹேப், செள. சக்வார்பாயி சாயேப் இவர்களுடைய உருவம் ஒன்று ...... என்பதாகும். கி. பி. 1776இல் அரசாண்டவர் இரண்டாம் துளஜா. இதில் கண்ட ரா கைலாஸ்வாஸி 'பெரிய மகாராஜா' என்றது அவருடைய தந்தை பிரதாபசிங்கரை. செள. யமுனாபாயி சாகேபாவும், சக்வார்பாயி சாகேபாவும், பிரதாபசிங்கர் கைலாசவாசி ஆகியபொழுது உடன்கட்டை ஏறியவர்கள்." ஆகவே அவ்விருவரையும் "மாசத்திகள்" எனக்கருதி அவர்கட்கும் கைலாச வாசி ஆகிய பிரதாபசிங்கருக்கும் உருவங்கள் ஒரே பீடத்தில் அமைத்துப் பூசனை நடத்தப்பெற்றது என்று கருத இடமுண்டு. இவர்கட்கு மட்டுமன்றி எல்லா அரசர்கட்கும், சுமங்கலிகளாக இறந்த அரசிகட்கும் உருவங்கள் அமைக்கும் பழக்கம் இருந்தமை தெரியவருகிறது." 11 _ 5. 4–450 5 அ, 2-186 6. பக்கம் 116, போன் ஸ்லே வம்ச சரித்திரம் (தமிழ்) 6. Tonks are kept of the deceased Maharajas and the Boi saibs who died in married state (as sumangalis)—Deposition of yogambal P, 1 1, I. 12–13; O. S. 26 of 1912 53