பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

427 " சிவாஜி மகாராஜா அவர்களுக்கு, காசி அய்யாறப்பத் தம்பிரான் எழுதிக்கொண்டது ............ மேலும் நமது திருப்பனந்தாள் மடத்துக்குக் காசி தருமம் சரிவர நடக்கவில்லை என்று மகாராஜாவின் கடிதத்துக்குத் தெரிவிக்கிறேன். ' என்பது இரண்டாம் சிவாஜிக்கு அய்யாறப்பத் தம்பிரான் எழுதிய கடிதத்தின் ஒரு பகுதியாகும். இது இரண்டாம் சிவாஜிக்கு அய்யாறப்பத் தம்பிரான் நேரிடையாக எழுதியது. திருப்பனந்தாள் மடத்துக்கு அரசர் காசித்தருமம் சரிவர நடக்கவில்லை என்று எழுதியிருந்தார் ஆதல் வேண்டும். அதற்கு மறுமொழியாக அய்யாறப்பத்தம்பிரான் சிவாஜிக்குப் பதில் எழுதி புள்ளார். இம்மறுமொழி தக்க சமாதானம் (explanation) ஆக இருந்த போதிலும் காசியில் இருந்தவர் தலைமையிடத்து வழி தன் மறுமொழியை அனுப்பியதாகக் கடிதத்தில் எந்தக் குறிப்பும் இல்லை. இதனாற்றான் காசிமடத்து அதிபர் அய்யாறப்பத்தம்பிரான் தனக்கு அடங்கி நடக்காமல் தன்நிலையில் செயல்படுகிறார் என்று குறிப்பாக எழுதினார்’ ஆதல் வேண்டும். ஆனால் அய்யாறப்பத் தம்பிரான் தலைமையிடத்துக்குக் குறைபாடில்லாத வண்ணம் மறுமொழி தந்திருப்பது கவனிக்கத்தக்கது. அம்மறுமொழி: பின்வருவது:- o " சிவாஜி மகாராஜா அவர்களுக்கு பூரீகாசி அய்யாறப்பத் தம்பிரான் எழுதிக்கொண்டது. அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளது, அதிக மழையினால். இப்பவும் நாகபூர் மகாராஜா காசியாத்திரை வந்தார்கள். அவரிடம் 25,000 கொடுக்கப்பட்டது. -- - * மேலும் நமது திருப்பனந்தாள் மடத்துக்குக் காசி தருமம் சரிவர நடக்கவில்லை என்று மகாராஜாவின் கடிதத்துக்குத் தெரிவிக்கிறேன். நமது படத்தின் துவேஷி ஜனங்கள் அப்படிச் சொல்லுகிறார்கள். பிராமணர்கள் தருமத்தைப் பார்ப்பதில்லை; சுயகாரியத்தையே பார்க்கிறார்கள்: சில குடியான வர்களும் அவருடன் சேருகிறார்கள். மகாராஜாவின் நிபந்தனையின்படி தருமங்கள் நடந்து வருகின்றன. மகாராஜாவின் அன்னசத்திரம், பிராமண போஜனம், திரெளபதாம்பாபாயி சாயேப் அன்னசத்திாம், தேவாலயம், சிவபூசை. அபிஷேக நைவேத்தியம், தீபாராதனை, டிைபாயி சாயேபுடையதும் பிரதோஷம் தந்தவனமும், விசுவேசுவரர் அன்னபூரணி பைரவ பூசைகள் நடந்து வருகின்றன. நமது பார்வையில் சம்பாஜி நாயகர் தருமம், கலிகி அக்கா துவாதசி தருமம். மலையாள தருமம், கொச்சி தருமம், கள்ளிக்கோட்டை தருமம், சேதுபதி தருமம், தொண்டைமான் தருமம், மதுரை தருமம், துறையூர் தருமம், வெங்ட கிளி நெல்லூர் ஆர்க்காடு சைதாபூர் ஹைதராபாத் சென்னப்பட்டணம் விஜய 2. ச. ம. மோ, த. 10.8 23, 7-686 (அடிக்குறிப்பு 17) 24 ச. ம. மோ. க. 10-8