பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430 காசியில் பிராமண போஜனம் தனியாகவும் மற்றவர்கட்கு அன்னம் பாலிப்புத் தனியாகவும் நடத்தப் பெறுவது மரபு. இரண்டாம் சரபோஜி காசிவாசம் செய்யும் அந்தணர்கட்குக் காசியில் (குமாரசுவாமி மடத்தில்)உணவு அளிக்க ஏற்பாடு செய்திருந்தார். காசிவாசம் செய்தவர் கவலையின்றிக் கல்வி நலமும் பெற்று வாழ்ந்திருந்தனர். நரசு என்றொருவர்; கன்னார் வகுப்பைச் சேர்ந்தவர்; சு. பாலகிருஷ்ண பாகவதரின் மகன். இவர் பார்ப்பனர்களுடன் அமர்ந்து உணவு உண்ணவேண்டும் என்று முயன்றார். இவரிடம் தருமபுரம் அருணாசலத்தம்பிரான்"அ அன்புடையவர்; ஆகையால் இவரை அந்தணர் சாதியில் சேர்க்கவேண்டும் என்று முயன்றார்; பிராமணர்களுக்குத் தொந்தரவு' கொடுத்தார்; சத்திரத்தை மூடினார்; பிராமணர்களுக்கு உணவு இல்லாதவாறு செய்தார். பிராமணர்கள் இணங்கவில்லை. விசுவேசுவரருடைய திருவருளால் அவர்களுக்கு வேறு இடங்களில் உணவு கிடைத்தது. சாதிப்பூசல் ஏற்படாமற் போயிற்று. "ു o பின்னர் அந்த மடத்தில் இளைய தம்பிரான், அருணாசலத் தம்பிரானிடத் தில் பிராமண போஜனத்தை நிறுத்துவது சட்டப்படி நியாயமல்ல என்று கூறிச் சத்திரத் தருமத்தை நடக்கச் செய்தார். எனினும் அருணாசலத் தம்பிரானுக்கு " நரசு ' என்பவர் பேரில் இருந்த அன்பு நீங்கவில்லை . எப்படியாவது நரசுவைப் பிராமணனாக்கிப் பிராமணர் வரிசையில் உட்காரச் செய்ய வேண்டும் என்று முயற்சி செய்தார். - ஆகையால் மகாராஜா அவர்கள் பிராமணர்க்கு ஏற்பட்ட தொல்லையை நீக்குவதற்கு ' சடப்பத்தம்பிரான் " அவர்களுக்குக் கடிதம் எழுதித் தொந்தரவு ல்லாமல் சோறிடச் செய்து, காசிவாசம் செய்யும் பிராமணர்களைப் பாதுகாக்க இ து யு து வேண்டும். - என்று இங்ங்னம் ' சரபோஜி ராஜா சாஹேப் அவர்களுக்குக் காசிவாசி வித்துவான் ஜனங்கள் எழுதிய கடிதம்' என்றுள்ளது." அருணாசலத் தம்பிரான் என்பவர் காசியில் குமாரசாமி மடத்தில் இருந்த தம்பிரான்களில் ஒருவர். இவர் அந்தணர் அன்னம்பாலிப்பைக் கவனித்தவர் ஆதல்வேண்டும். " இளைய தம்பிரான்” என்பது திருப்பனந்தாள் காசிமடத்து அதிபர் ஆக இருப்பவர்கட்குப் பின் உரிமையுள்ளவராதல் கூடும். அதனால் தான் அவர் கூறியதை அருணாசலத் தம்பிரான் கேட்டு அவர் சொற்படி நடந்தார். " சடப்பத்தம்பிரான் " என்பது அந்தாளில் காசிமடத்து அதிபராக இருந்த சடையப்ப சுவாமிகள் என்றவராதல்" வேண்டும். இக்கடிதத்தால், அந்தணருடன் உடன் உண்ணவேண்டும் என்று அந்நாளில் சிலர் கருதினர் என்றும், அதற்குச் சிலர் ஊக்கமளித்தனர் என்றும் தெரியவருகிறது. அந்நாட் 30.அ. துரோணாசலத்தம்பிரான் என்றுளது. 31. 1-24 முதல் 27 முடிய 32. அடிக்குறிப்பு 6இல் விரல் எண் 9