பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43? அரண்மனை வேணுகோபாலசுவாமி மகாலுக்கு வந்தார் பூஜை நைவேத்யம், சமாராதனை அங்கீகரித்துக்கொண்டார்." அவர் வெண்ணாற்றங்கரையில் தங்கியிருந்தார். அவர் அங்கிருந்து செல்கிற வரையில் ஆகிற செலவுகள் தரப்பெற்றன." கி. பி. 1849இலும் அகோபில ஜீயர் தஞ்சைக்கு வந்தார் என்றும், விடோபா பஜனசாலையில் இறங்கினார் என்றும் தெரியவருகிறது." அகோபில மடம் ஜீயர் மடத்துக்கு விருத்தர் பானாசாரியர் அதிபர் ஆனார் என்று. கி. பி. 1848க்குரிய குறிப்புக் கூறுகிறது.1 - கி. பி. 1820-21இல் இரண்டாம் சரபோஜி காசியாத்திரைக்குச் சென்ற பொழுதுகயையில் 4-5-1821இல் தங்கினார். அங்கு அகோபில மடம் ஜியர் " மந்திராகூடிதை கொடுத்தார் ; அதனை அரசர் தலையில் அணிந்து கொண்டார் " இங்ங்னம் ஒரு செய்தி உள்ளது. கயையில் அகோபில மடம் இருந்ததா என்பது தெரியவில்லை. " 1829: அஹோபிலம் ஜீயர் சுவாமிகள் மடத்திலிருந்து சர்க்காருக்கு பூரீமுகபத்திரம் வந்ததற்குப் பத்திரத்துக்குப் பூசைகள் செய்து தகடினை கொடுத்தது ரூ. 7; "1842. அஹோபில மடத்து ஜீயர் ஸ்வாமிகள் பூரீமுகத்தின் பூசைச் செலவுகளுக்கு 117H " 1843 : அஹோபிலம் ஜீயர் மடத்துக்கு அதிஷ்டானம் விருத்தர் பானாசாரியர் அதிபதியானார். அவர் மகாராஜாவுக்கு பூரீமுகம் எழுதியனுப் பினதற்கு மரியாதை பல்லக்கில் வைத்து வாத்தியத்துடன் கொண்டுவரப் பட்டது” என்றும், " சகம் 1785: பூரீசங்கராசார்யசுவாமி அனுப்பிவைத்த பூரீமுகம் கொண்டு வருவதற்கும் படிப்பதற்கும் - பூரீமுகம் பூஜை - பூரீவசிஷ்டேசுவரசுவாமிகோயில் ; ரு, ; ஹா ஜூரில் பூரீமுகப்பூசைக்கு தகூடிணை 10 ” என்றும் சில குறிப்புக்கள் உண்டு. இவற்றால் அஹோபில மடம் சங்கரமடம் ஆகிய பிராமண மடங்களினின்று வரும் கடிதங்களுக்குப் பூசை செய்து மரியாதையோடு கொணர்ந்து வாசிப்பது அந்நாளில் பழக்கம் என்று தெரிகிறது. -- 69. ச. ம, மோ, க. 4-14 70. ச. ம. மோ, த. 5-10 71. ச. ம. மோ. க. 9-27 72, 5-95. 73. ச. ம. மோ, தி. 4-14 74, 4-80 75. ச. ம. மோ. கி. 9-27 76, 11-62