பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

439 நடந்திருக்கிறது. கி. பி. 1843இல் அருணகிரி விருபாகூஜி தேவர் என்பவர், மல்லிகார்ச்சுன விருபாகூஜி தேவர் என்கிற அப்பு-விருபாகூஜி தேவர், சுப்பிரமணியன் ஆகியவர்கள் பேரில் வழக்குத் தொடுத்தார். அப்பு விருபாகூரி தேவர் சிவபூசை மடத்துச் சொத்துக்களைச் சுப்பிரமணியன் என்பாருக்கு ஒற்றி வைத்தார். 19-1-1843இல் ஒற்றி வைத்தது தவறு என்றும், அந்நிலங்களை அருணகிரிக்கு ஒப்புவிக்க வேண்டும் என்றும் முத்திரித சபையில் தீர்மானித்தார்கள். தர்ம சபையில் அவர்கள் எதிர்வழக்காடிய போதிலும் 24-6-1843இல் மேல் முறையீடு தள்ளுபடி செய்யப்பெற்று இத்தீர்ப்புக்கு மேல் முறையீடு கெடுவும் முடிந்தது. 2-12-1843, 14-1-1844 ஆகிய தேதிகளில் மடத்தை ஒழித்துக்கொடுக்கும்படி மனுக்கொடுத்த போதிலும் பிரதிவாதிகள் சரியாக நடந்து கொள்ளவில்லை. இரண்டாவது பிரதிவாதி இசுபசால் ' எனும் வழக்கு மன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 26-2-1845இல் மங்குமாரி துரையிடத்தில் முறையிட்டதும் " இசுபசால்." பிராது தள்ளுபடி செய்யப்பெற்றது. மடத்தைச் சுவாதீனம் செய்து கொடுக்கக் கொத்தவால் வந்தபோது மடம் பூட்டப்பட்டிருந்தது. கொல்லனைக்கொண்டு பூட்டுத் திறந்து வசப்படுத்திக்கொண்டபிறகும் முதல் பிரதிவாதி மீண்டும். மடத்தை ஒற்றி வைத்துவிட்டான். ஆகையால் இதுகாறும் கொடுக்கப்பெற்ற தீர்ப்புக்களின்படி மடத்தை வாதியின் சுவாதீனத்தில் சேர்க்கவேண்டும் என்று 26-11-1848இல் ரெஸிடெண்ட் பிஷப் அவர்கட்குப் " பிராது " கொடுத்தார். இவ்வழக்குத் தவிர்த்து வேறு செய்திகள் இம்மடத்தைப்பற்றித் தெரியவில்லை. தஞ்சாவூரில் கோசாமி மடம் கி. பி. 1824இல் கும்பகோணத்தில் வெங்கோபா கோசாமி என்று ஒருவர் இருந்தார். அவருடைய பாட்ட்னார் பாளாஜி கோசாமி என்பவர் ஆவர்; அவர் பெயரால் தஞ்சையில் மடம் இருந்தது. அதற்கு மாதத்திற்கு ரூ. 7 வீதம் கொடுக்கப்பட்டு வந்தது. அவ்வுதவித்தொகை சிறிதுகாலம் கொடுக்கப்படாமல் இருந்தது. அதனைக் கொடுக்கவேண்டும் என்று விண்ணப் பித்ததாக ஒரு ஆவணத்தில் உள்ளது.” 82. 6-114 முதல் 129 வரை 83. 5.1, 2, கி. பி. 1680இல் சிவாஜியின் ஞானாசிரியாகச் சமர்த்த ராமதாஸ் தஞ்சைக்கு வந்தார். தன்னுடைய சீடராகிய ஆந்பீமராஜ் சுவாமிகளைத் தஞ்சையில் இருக்கச் செய்தார். இவர் 1741 வரையில் இருந்தார். இவரது சீடர்கள் ஜோளிராம் பாவா, கோவிந்தபாளா ஆக்மாராம் என்று முவர். இம்முவரும் தனிக்கனி மடங்களை நிறுவினர். கோவிந்தபாளா நிறுவிய மடம் சகாஜிநாயக்கன் தேருவிலுள்ளது. (இதிலும் அடிக்குறிப்பு 80லும் கண்ட செய்திகளைச் சரஸ்வதிமகால் மத ட்டியப் புலவர் திரு. பீமராவ் அளித்தார்) --> There are four other Ramasami Mutts in Tanjore. The names are Beerma Row Swamiar's Mutt otherwise Ruthraji Bava. Then Anna Goswami's Mutt, Goliram Bava's Mutt, Govinda Balu Swami Mutt and Sethu