பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 தமிழ்க்கு அளித்த ஆதரவு மராட்டிய மன்னர் ஆட்சி செய்த சோழவளநாட்டில் 18, 19ஆம் நூற் றாண்டுகளில் வாழ்ந்த தமிழ்ப் புலவர் பலர் ஆவர். அவர்கள் யாவரும் இம் மன்னர்களுடைய நேரிடை ஆதரவு பெற்றனர் என்பதற்குச் சான்றில்லை. எனினும், இவர்தம் நேரிடை ஆதரவில் எழுந்த நூல்கள் பல என்பதில் ஐயமில்லை. மராட்டிய மன்னரும் தமிழ்ப் புலமையெய்தி நூலாசிரியராகவும் திகழ்ந்தனர் என்று தோன்றுகிறது. லாஹஜி மன்னர் எழுதியது லாஹஜி என்பவர் " காவேரி கல்யாண நாடகம்" என்ற ஒரு நாடக நூலைத் தமிழில் எழுதியவராக அறியவருகிறது. திரா. பா. காவேரி கல்யாண நாடகம் - ஸாஹராஜ க்ருதம்-தைலங்கபக்கம் 40 விவாஹ ' டஎன்ற குறிப்பால் 1684 முதல் 1710 வரை ஆண்டவரும், ஏகோஜியின் முதல் மகனாரும் ஆகிய ஸாஹஜி என்பவர் " காவேரி கல்யாணம்" என்ற நாடக நூலைத் (திராவிட பாஷையில்) தமிழில் இயற்றினார் என்றும், அது தெலுங்கு மொழிக்குரிய எழுத்தில் எழுதப்பட்ட ஒலைச்சுவடியென்றும் தெரிய வருகிறது. " காவேரி கல்யாணம் அரவி பாஷை' என்றகுறிப்பு. இது தமிழ் மொழியில் எழுதப்பட்டது என்பதை வலியுறுத்தும். _ மு. 12-193 (எண் 2429) 1.அ. 12-217 (வரி 27)