பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 பொருட்டு, நான் " குதுப்சஹாவை'ப் பார்த்தற்காகப் பாஹா நகருக்குச் சென்றேன் ; அங்கிருந்து கருநாடகத்துக்குச் சென்றேன் அங்கிருந்து செஞ்சியை அடைந்து செஞ்சியைக் கைப்பற்றினேன் : அங்கிருந்து வேலூர்ப் பகுதியையும் கைப்பற்றிக் கொண்டேன்; மற்றும் சதர்கானைப் போரில் தோல்வியுறச் செய்து கூட்டத்தைச் சேர்த்துக்கொண் டேன் ; சதர்கா னிடத்தில் இருந்த அதிகாரத்தைக் கைப்பற்றினேன். பின்னர்க் காவிரிக் கரைக்கு வந்தேன் ; அங்கிருந்து தங்கட்குக் கடிதம் எழுதலானேன். கோவிந்தபட்டு கோசாமி, காகாஜி பந்த், நீரோபாநாயிக், ரங்கோபா நாயிக், திம்மாஜியச்சார்ராவ் போன்ற நல்லவர்களை நம்மிடம் அனுப்புக என்று பல முறைகளில் கடிதம் எழுதி அனுப்பினேன். அதற்குமேல் தாங்கள் அந்நல்லவர் களை என்னிடம் அனுப்பினர்கள். அந்த நல்லவர்களிடத்தில் நம்முடைய குடும்பச் செய்திகள் யாவும் கூறி நமக்குரிய பாதிப்பங்கை நமக்குப் பங்கிட்டுக் கொடுக்குமாறு சொல்லுங்கள் என்று கூறி அனுப்பினேன். அவர்களோடு பாளன்பட்டு பட்டுகோசாமி, கிருஷ்ண ஜோதிவி, கிருஷ்ணாஜி, ஷேக் ஜி போன்றவர்களைத் தங்களிடத்தில் அனுப்பிவைத்தேன். அன்னோர்.தங்களிடத் தில் நல்லமுறையில் பேசி, 'வீட்டுப் பூசல் வேண்டாம் ; தம் பாதி உரிமைப் பங்கைத் தானே கேட்கிறார் ; அதைக் கொடுத்துவிடுங்கள் ' என்று கூறினர். தாங்கள் வஞ்சகமாக (கபடமாக) இருந்தீர்கள். இப்பொழுது நான் பேரரசனாக இருக்கிறேன். தாங்களாகவே வந்து என்னைக் காணவேண்டும் எனக்கு மரியாதை காட்ட வேண்டும். தாங்கள் என் பங்கைக் கொடுக்காமல் மோசம் செய்யப் போகிறீரா ? பதின்மூன்று ஆண்டுகள் அரசச்செல்வம் யாவும் எடுத்துக் கொண்டீர்களே மேலும் தங்கட்கே எல்லாப் பங்கும் வரவேண்டும் என்ற கெட்ட எண்ணங்கொண்டு பங்கு கொடுக்க ஒப்பந்தம் செய்து கொள்வது போல் நேராகத் தாங்கள் என்னைக் காணவந்தீர்கள். இருவரும் கண்டு பேசி னோம். என்னுடைய பாதிப் பங்கைக் கொடுங்கள் என்று கேட்டேன். தாங்கள் என் பங்கைக் கொடுப்பதாகவே இல்லை. தாங்கள் என் இளவல்; தாங்களாகவே என்னைக் காணவந்தீர்கள். இந்நிலையில் உங்களைப் பிடித்துக்கொண்டு பங்கு கேட்பது என் பெருந்தன்மைக்கு அழகல்ல. ஆகவே உங்களைத் தஞ்சாவூருக்குப் போகவிட்டேன். தாங்களும் தஞ்சாவூர்க்குச் சென்றீர்கள். இனியும் வீட்டுப்பூசலை வளர்க்கவிடாதீர்கள். அப்படி வளர்த்ததால் முன்னா ளில் பாண்டவர்களும் கெளரவர்களும் தொல்லைகளை அடைந்தனர். பாரதக் கதைகள் யாவும் மனங்கொண்ட பிறகும் வீட்டுப் பூசலை வளர்த்தீர்கள் என்றால் இரண்டு பேருக்கும் தொல்லைகள் ஏற்படும். இதனை எண்ணி மறுமுறையும் சாம்ஜிநாயக், கோனேரிபந்த் மற்றும் சிவாஜிசங்கர் ஆகிய இவர்களைத் தங்களிடத்தில் அனுப்பி நாமிருவரும் மீண்டும் மனமொத்து வாழவேண்டும் என்று சொன்னோம். ஆனால் தாங்கள் துரியோதன ன்ைப்போல் கெட்ட எண்ணம் கொண்டு பேசுவதற்கு வாய்ப்புக்கொடுக்காமல் போர் செய்யவேண்டும் என்று எண்ணங்கொண்டு இருந்தீர். இந்நிலையில் எனக்கு ராய்கட் பகுதியில் அதிக வேலையிருந்தது. அதனால் சந்தாஜி: ராஜ்யபூரீ பந்த், ரகுநாத பந்த், ஹம்பீரராவ் போன்றவர்களை நம்முடைய 6