பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 வேண்டும். தாங்கள் அப்பக்கத்தில் தங்கள் வீரம் புலப்படுமாறு செய்து மகிழ்வுடன் இருந்தால், எங்கட்கு “எம் உடன் பிறந்தான் வீரத்தோடு திகழ் கிறான்" என்று மனம் ஒருப்பாடு அடையும். அரசச் செல்வமுடைய ரகுநாத பண்டிதர் அந்தப்பக்கத்தில் இருக்கிறார். அவர் தங்கட்கு வேற்றவர் அல்லர்: தங்கட்கு மிக்கநாட்களாகப் பழக்கம் உள்ளவர்; தாங்கள் எந்தமுறையில் நடக்கவேண்டும் என்பதை அறிவுறுத்தத் தகுதியுடையவர். என்னை மதிப்பதைப்போல் தங்களையும் அவர் மதிக்கிறார். நான் அவரிடத்தில் மிகவும் அன்பும் நம்பிக்கையும் வைத்திருக்கிறேன். அதுபோன்று தாங்களும் நம்பிக்கை வைத்துப் பயனுள்ள செயல்கள் புரிந்து, இருவர்க்கும் நன்மை பயக்கும் செயல்களுக்கு வழிகோலவேண்டும். வீரமின்றிப் புகழின்றி, வீணாக இருந்து, மக்களின் செல்வத்தை வீண் செய்து, காலத்தை வறிதே போக்குதல் வேண்டாம். காலத்தைப் பயன் உள்ள வழியில் செலுத்தவேண்டிய நேரமிது. இறுதிக் காலத்தில் "வைராக்கியம்' பூண்பது பொருந்தும். இப்பொழுது கடமை களைச் செய்து நமக்கு ஊக்கத்தைக் காண்பிக்க வேண்டியது. மேலும் என்ன எழுதுவது ? தாங்கள் அறிவுடையவராய் இருக்கிறீர்கள். குறிப்பு : 1. 1664 +13 = 1677 2. குதுப்சாஹி அப்துல் குதுப் வடிா-இவர் கோல்கொண்டாவின் நவாப் ஆவர். இவர் 1672இல் இறந்தார். அவருடைய மருமகன் அபுஹ-சேன் அரசர் orri. (A History of the Maratha People-Kincaid – Page. 252) 3. கி. பி. 1678இல் சிவாஜி செஞ்சியைக் கைப்பற்றினார். 4. சதர்கான்-ஷெர்கான்லோடி (Maratha Rule in the Carnatic – C. K. Šrinivasan – Pages 158, 159) திருமழபாடியாகலாம் : திருவாதி என்று சிலர் கருதுவர். 5 6. 1677 நவம்பர்த் திங்களில் ராய்கட் என்ற இடத்துக்குச் சிவாஜி சென்றார். = 7. தென்னாட்டில் சிவாஜி வென்ற பகுதிகளை மேற்பார்வை செய்யச் சிவாஜியால் நியமிக்கப்பட்டவர் சந்தாஜி ; இவருக்கு அமைச்சர் ரகுநாதபந்த் படைத் தலைவராக இருந்தவர் ஹம்பீரராவ். 8. வாலிகண்டபுரம் ஆக இருக்கலாம் (P. 240, New History of the Mahrathas, Vol. 1 by G. S. Sardesai (1946) 9. இந்தப் போருக்குப் பிறகு இந்தக் கடிதம் எழுதப்பட்டிருக்கலாம்.