பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi இவ்வழக்கிலேயே, தஞ்சை சமஸ்தானச்சுவடிப் பொறுப்பாளர் (Record keeper. Palace Estate, Tanjore ) okas 3.05/55Suðub, Gujhāsār- வழக்கில் 49ஆவது சாட்சியாக விசாரிக்கப்பட்டவரும் ஆன திரு. கிருஷ்ணராவ் என்பவர் சில மோடி ஆவணங்களை மொழிபெயர்த்துள்ளதாகவும், அவற்றை நீதிமன்றத் திலேயே மொழிபெயர்த்ததாகவும் கூறியுள்ளார் (பக்கம் 395). இம் மொழி பெயர்ப்புக்கள் கிடைக்கப்பெறின் அவற்றின் துணைகொண்டு அந்நாளைய அரண்மனைப் பழக்க வழக்கங்களைப் பற்றியும், அரசியல் அலுவலர்கள் பலரைப் பற்றியும் அறிந்துகொள்ள வாய்ப்பாகும். ■ 18, 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மராட்டிய அரசர் ஆட்சி செய்த தஞ்சைப்பகுதியில் வாழ்ந்த குடிமக்களின் வரலாற்றை அறிவதற்குரிய மோடி ஆவணங்கள் காகிதத்தில் உள்ளமையால் அவற்றைப் போற்றிப் பேணுதல் நம் கடமையாகும். இம்முயற்சியில் தஞ்சை சரஸ்வதிமகால் பெரிதும் ஈடுபட வேண்டும் என்பது எல்லாருடைய எண்ணமும் ஆக இருக்கும் என்பதில் ஐயமில்லை. நன்றியுரை இவ்வாவணங்களைப் படித்து ஆய்வு செய்யுமாறு பணித்தமையோடு, அவ்வப்பொழுது ஊக்கியும், இந்நூலிற் கண்ட கட்டுரைகள் எல்லாவற்றையும் வரி வரியாகப் படித்துத் தக்க மாற்றங்களைக் கூறிச் செம்மைப்படுத்தியும், பற்பல அறிவுரைகள் தந்தும், இடையறாது கண்காணித்தும், இந்நூல் இந்த அளவில் உருவாகியதற்கு உறுதுணையாய் இருந்த தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் மாண்புமிகு டாக்டர். வ அய். சுப்பிரமணியம் அவர்கட்கு நன்றி உரியதாகும். அவ்வப்பொழுது எனக்குத் தோன்றிய ஐயங்களை நீக்கி அரிய செய் திகளைக்கூறி ஊக்கம் அளித்த தஞ்சை அரண்மனை மூத்த இளவரசர் ராஜேபுரீ ராஜாராம் ராஜா சாஹேப் அவர்கட்கு நன்றியறிவுடையேன். தஞ்சை சரஸ்வதி மகால் நூல் நிலையத்து நூலகர் திரு. பஞ்சநதம் அவர்களும், உதவி நூலகர் திரு. சீராளன் அவர்களும் நான் வேண்டும் பொழுதெல்லாம் வேண்டிய நூல்களை எடுத்துத் தந்து உதவியமைக்கு மனமார்ந்த நன்றியைச் செலுத்திக் கொள்கிறேன். மேற்படி நூல் நிலையத்துத் தமிழ், தெலுங்கு மராட்டிய, சமஸ்கிருதப் புலவர்கள் தம் கருத்துக்களை அவ்வப்பொழுது வழங்கியமைக்கு நன்றி, கோயில்கள் முதலியவற்றின் படங்களை அழகுற எடுத்துத் தந்த தஞ்சை ஜெயபாலன் அவர்களுக்கும் நன்றி. காலதாமதம் செய்யாமல் இன்முகத்தோடு தட்டச்சுச் செய்து கொடுத்த திரு. கு. ச. மகாலிங்கம் அவர்கட்கு நன்றி. தமிழ்ப் பல்கலைக் கழகம், கே. எம். வேங்கடராமையா தஞ்சாவூர். சிறப்புநிலைப் பேராசிரியர்