பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vii

மெக்கன்சி சுவடி ஆகியவற்றினோடு ஒத்திருப்பினும், வேறுபட்ட இடங்களும் உண்டு; அதிகமான செய்திகளும் உண்டு விடுபட்டவையும் உண்டு. இவை ஆங்காங்கு உரிய இடங்களிற் சுட்டப்பட்டுள்ளன.

பதிப்பெய்தும் சுவடி 19-ஆம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் எழுதப்பட்டதாதலின், அந்நாளைய மக்களின் பேச்சுமொழி - எழுதும்மொழி பற்றி அறிய, இச்சுவடி மொழியியல் ஆய்வாளர்க்குப் பெரிதும் பயன்படும் என்பது உறுதி. இந்நோக்கில் முழுச் சொல்லடைவும் இணைக்கப்பட்டுள்ளது.

கன்றியுரை

இச்சுவடியைப் பதிப்பிக்கலாம் என்று ஒப்புதல் அளித்து வேண்டிய அளவு விளக்கங்களையும் தந்த சுவடிப்புலக்குழு, அரிய கையெழுத்துச் சுவடித் துறை ஆய்வுக்குழு ஆகியவற்றின் உறுப்பினர்கட்கு நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளேன்.

இப்பணியை மேற்கொள்வதற்கு ஏற்ற நிலையில் பணி நீட்டிப்பு அளித் தருளியதுடன், சுவடிகள் முதலியவற்றைப் பெறுவதற்கு உடனுக்குடன் வேண் டிய பொழுதெல்லாம் இசைவாணைகளை வழங்கி, ஆய்வுரைகளைக் கண்டு அவ்வப்பொழுது ஊக்கியருளிய தமிழ்ப் பல்கலைக் கழகத்துத் துணைவேந்தர். முதுமுனைவர் வ. அய். சுப்பிரமணியம் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மராட்டியர் வரலாறு தொடர்புடைய எல்லாச் சுவடிகளையும் துண் படம் எடுத்துக் கொள்ள அனுமதித்தும், காப்பீடு சுவடிகளைத் தந்தும். இச் சுவடியை அச்சிட இசைவு நல்கியும் ஊக்கமளித்த சென்னை அரசினர் கிழக்கியல் சுவடிகள் நூலகத்துப் பாதுகாவலர் அவர்களுக்கும். சிறப்பாகத் தமிழ்நாடு அரசு தொல்பொருள்துறை இயக்குநர் முனைவர் இரா. நாகசாமி அவர்கட்கும் நன்றி.

சென்னைக் கிழக்கியல் சுவடிகள் நூலகத்து அன்பர்கள் திரு. செளந்தர பாண்டியன், முனைவர் ம. இராசேந்திரன் ஆகியவர்கட்கும் நன்றியுரியன.

தஞ்சை, சரசுவதி மகால் நூல் நிலையத்து நூலகர் உதவி நூலகர்கள், தமிழ், வடமொழி, தெலுங்கு, மராத்தி மொழிப் புலவர்கள் ஆகியவர்கள் அவ்வப்போது அளித்து வரும் உதவிகட்கு மனமார்ந்த நன்றி.

புலவர் செ. இராசுவுக்கு ஆசியொடு கூடிய நன்றியுரியதாகுக.

அரிய கையெழுத்துச் சுவடித்துறை கே. எம். வேங்கடராமையா 24–1–1986 சிறப்பு நிலைப் பேராசிரியர்