பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

121

 12I

இந்த சந்தாசாயபு பண்ணிய கிறித்தியத்துக்கு" நாமவனை வைக்கப் போகாது;" ஆகிலும் சரணம் வந்தடைந்த படியினாலே அவன் . பண்ணின தெல்லாம் மனதிலே வைக்கப்போகாது; அவனைக் காப்பாத்துகிறதே விஹிதமானபடியினாலே அந்த சந்தாசாயபுவை தஞ்சாவூருக்கு அனுப்பிவிக்கச் சொல்லி யெழுதி அனுப்பிவித்தார்.

அப்போ சந்தாசாயபுவை கானோ மென்கிற சேதி நவாபு மமுதல்லி கானுக்கு தெரிந்து சோதித்துப் பார்க்கிற யிடத்தில் மூணாம் னாள் தஞ்சாவூர். பாளையத்திலே யிருக்கிற சேதி தெரிந்து கொண்டு மானோஜிறாஜாவுக்கும் மஹா றாஜாவுக்கும் பிறார்த்தனை பண்ணினது யென்னவென்றால், மஹா ருஜா வாலே யென் பிராணன் நிண்ணுது; மஹா ருஜா அவர்கள் ஆசறா பண்ணின படியினாலே' பிழைத்து மறுபடியும் என்னுடைய பதவிக்கு வந்து சேர்ந்தேன்; அந்த வேளையிலே இறாசத்மோதின்கானும் சந்தாசாயபும் வந்தார்கள்; அந்த அவசரத்தில் யெனக்கு ஆசறா பண்ணுகிறத்துக்கு யெந்த தயிரிய வந்தானிருந் தார்கள்; அப்படிக்கொத்த வேளையிலே யென் நிமித்தியம், பின்னாலே யெந்த பலம் வந்தாலும் வரட்டும், பார்த்துக் கொள்ளுவோமென்று தயிரியமாய் எனக்கு ஆசறாபண்ணினபடியினாலே நான் (மறுபடியும்)" என்னுடைய தவலத் துக்கு வந்து சேர்ந்தேன்; இப்பவும் அப்படியே தயவுபண்ணி என்னுடைய தொகப்பனார் பழி நான் வாங்கத் தக்கதாய் சந்தாசாயபுவை. என்கிட்ட ஒப்புவித்துப் போடவேணுமென்று பெகுவிதத்திலே பிறார்த்தினை பண்ணினார். இதுவுமல்லாமல் நந்திறாஜா முறாஜி கோற்படேயும் சந்தாசாயபுவை ஒப்புவிக்கச் சொல்லிக் கெட்டார்கள். அப்படியே யிங்கிலீஸ்காறரும் அந்த சந்தாசாயபுவை ஒப்புவிக்கச் சொல்லி பலோத்காறமாய்" கேட்டார்கள். அப்போ மானோஜி றாவுக்கும் அவாளுக்கும் சற்சை* யாய் சீவனோடு ஒப்புவிக்கிறதில்லை என்று சொல்லி சந்தா சாயபுவை கழுத்தறுத்து ஆயிரத்து எழுநூற்று அன்பத் திரண்டாம் வருஷம் சூன்மாதம் கூஉ' அந்த தலையை நவாபுகிட்ட அனுப்பி

176. கிறித்தியத்துக்கு - காரியத்துக்கு (போ. வ. ச. பக். 107) 177. வைக்கப்போகாது - காப்பாற்றவே கூடாது (டிெ)

178. ஆசறா பண்ணினபடியினாலே - அபயமளித்ததால் (வெடி) * முத்திரைவிழுந்து மறைந்த பகுதி . 'மறுபடியும்' (டி 3762)

179. The next morning they (the Nabob, the Mysorean and the Morattoe) repaired together with Monackjee to Major Lawrence's tent in whose presence they held a council. Each of them insisted that Chanda Saheb ought to be delivered to himself supporting the demand with the superior importance each thought he bore in the cause”- (Robert Orme, A History of the Military Transactions of the British Nation in Indostan, Vol I (IV Edition, London, Madras 1861, Page 238)

180. பலோத்காறமாய் - அதிகார தோரனையில் (போ. வ. ச. பக். 108) 181. சற்சையாய் - சம்பாஷணை தொடங்கி (போ. வ. ச. பக். 108) 1s2. “On 17th June 1752 Chanda Sahib was executed”- (Rajayyan, Page 33)

69-16