பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

தஞ்சை மராட்டிய



வித்துப் போட்டு மானோஜிறாவு தஞ்சாவூருக்கு பிறப்பட்டு வந்தார். இதுக்கு முன்னே தஞ்சாவூர் சேனைகள் நவாபுக்கு கும்மக்காய் வருகிறபோது த்ளைடும்.உ வருஷம் ஏப்பிறில் மீ" 21வ* மானாஜிறாவு கோவிலடி கில்லாவிலே பிறாஞ்சுக் காரர் டாணைய மிறங்கியிருந்ததை எடுத்துப் போட்டு கோட்டையை சுவா தினம் பண்ணிக் கொண்டார்." சந்தாசாயபு தலையை அறுத்த பிற்பாடு நவாபு மமுதல்லிகான் பிறதாபசிம்ம மஹா றாஜாவுக்கு தற்ம சிலவுக்கென்று இளங்காடு' சீர்மை லக்ஷம் றுபாய் பெறுகிறதும் குடுத்து கோவிலடிக் கோட்டையைக் கொடுத்தார்." அப்படியே விசைய றகுநாதறாய தொண்டை மானுக்கும் பேஷ்கவு மாப்பு பண்ணிப் போட்டார்.' நந்திறாஜாவும் முறாஜி கோற்படே என்கிறவனும் திருச்சினாப்பள்ளி கோட்டை ஆசையினாலே நவாபு மேலே உயித்தத்துக்கு ஆரம்பித்தார்கள்." அப்போவும் தஞ்சாவூர் மஹா ஹாஜா நவாபுக்கு கும்மக்கு அனுப்பி வித்தார்கள். கொஞ்சம் நாள் சண்டையாச்சுது. அந்த சண்டையிலே நந்திறாஜா பாரிசத்திலே யிருந்து ஒரு ஆனை ஓடிவந்து தஞ்சாவூருக்கு வந்து சேர்ந்துது. நந்தி ஹாஜா பாரிசத்தில் ஒரு பீரங்கியை தஞ்சாவூர் சற்தார்கள் போய் விழுந்து கொண்டு' வந்தார்கள்.

அப்பால் நவாபு மமுதல்லிகான் திருச்சினாப்பள்ளிக் கோட்டையிலே இங்கிலீஸ் காறருடைய சேனைகளை மசுபத்தாய் வைத்துப் போட்டு" தாம் சறுாறாய் கொஞ்சம் இங்கிலீசுகாறருடைய பாளையத்தை கூட அழைத்துக் கொண்டு சென்னபட்டணத்துக்குப் போனார். அந்த சேதி நந்திறாஜா முறார்ஜி கோற்படேயுக்கும் தெரிந்து தங்களை மோசம் பண்ணிப் போட்டு போய் விட்டாரென்று முறார்ஜிகோற்படே தம்பி புஜங்கறாவும் அவர் மருமகன் கூட கொஞ்சம் சேனைகளுடனே பின்னாலே வந்து வளைந்து கொண்டு பண்ணு

I & J. 2 I – 4 - 1752 184. “On 26th April 1752 Maratha General Manoji captured Koviladi from the French”- (Srinivasan, Page 265) 185. இளங்காடு - அளங்காடு (போ. வ. ச. பக். 108)

186. “The Nawab in regard for the aid given by the Raja granted a release for ten year's peshcush or tribute outstanding and ceded to the Rajah under a Sanad the two districts of Koiladi and Yalangadu who had previously belonged to Trichinopoly”— (Tanjore Dt. Manual, Part V, Page 788)

187. மாப்பு பண்ணிப் போட்டார் - விட்டுக் கொடுத்தார் (போ. வ. ச. பக். 108)

1ss. “In return for the services rendered by Mysore for the over throw of Chanda Sahib, Muhammad Ali had promised the cession of Trichinopoly. But on gaining victory he flatly refused to honour the solemn pledge. In frustration Mysore entered into an alliance with Murari Rao and commenced hostilities against Muhammad Ali and his ally, the English"- (Rajayyan, Page 24)

189. விழுந்துகொண்டு - வீழ்த்திக்கொண்டு (போ. வ. ச. பக். 108)

190. சேனைகளை மசுபத்தாய் வைத்துப்போட்டு - இடங்களை நன்றாய்ச் செப்பனிட்டு (போ வ. ச. பக், 109)