பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

தஞ்சை மராட்டிய

I26

மூணாவது திரம் " பிக்கட்டு சாயபு புதுச்சேரி கோட்டைமேலே வந்தி றங்கி சண்டை போட்டபோதும் 81 மஹா றாஜாவுடைய கும்மக்கு வேணு மென்று கேட்டுக் கொண்டபோது மஹா ருஜா அவர்கள் பாரி கும்மக்கா யனுப்பிவித்து சகாயம் பண்ணினார்.

இந்தப்படிக்கு மூன்று தடவையும் இங்கிலிசுகாறர் சொந்தக்காரியத்துக்கு மஹா ருஜா அவர்கள் கும்மக்கு அனுப்பிவித்து சகாயம் பண்ணினபடியினாலே பிக்கட்டு சாயபுக்கு சந்தோஷமாய் தாம் சீர்மைக்கு " போறத்துக்கு முன்னு தாக மேஸ்தர் டுப் பிரி'என்கிற சற்தாரை மஹா ஹாஜாகிட்ட அனுப்பிவிச்சு மஹா ஹாஜாவுக்கும் இங்கிலிஸ் காறருடைய சினேகத்துக்கும் புருேவிறுத்தியா யிருக்கும்படியாய் ஒரு உடன்படிக்கை பண்ணினார்.

அப்பால் மானோஜிருவு ஜெகதாபுக்கு சரிக்கிலும் சேனபதி தினமும்’18 நடந்து வந்துது. ஆனால் மானோஜி ருவு நடத்தை ஒரு யோக்கியதைக்கும் யுக்த்தமா யிராதபடியினாலே அவரை யடித்துப் போட வேணும். ஆனால் முன்னாலே ரெண்டொருத்தரை அவாள் அகுறுத்தியத்தினாலே அடிபட்டுப் போனாலும் அடித்துப் போட்டோமென்று மஹாறாஜாவுடைய மனதிலே பசியா தாபமா யிருந்தபடியினாலே மானாஜிறாவை அடிக்காமல் சரிக்கில் உத்தியோ கத்தை மாத்திரம் எடுத்துப்போட்டு பிறா மணாள் எந்த கிறித்துறமத்துக்கும் துணியமாட்டாள், பின்னையும் பயந்து புத்தியோடே நடப்பார்கள் என்கிற நிச்சயத்தினாலே றாச்சிய விசாரணையை டபீர் நரோ பண்டிதர்' சுவாதீனம் பண்ணி முடிய நடப்பித்துக் கொண்டு வந்தார்கள்.

அப்பால் நவாபு மமுதல்லிகான் திருச்சினாப்பள்ளிக்கு வந்து இருந்து தஞ்சாவூர் மஹா ஹாஜாவுடனே பேஷ்கள் பணத்துக்கு சவாபு சால பண்ணி னத்தின்பேரிலே மஹா ஹாஜா அவர்கள் சொன்ன உத்தரம் சரிப்படாமல் சண்டைக்கு ஆயித்தமாயிருந்தார்கள். அப்போ இங்கிலீசுகாற சற்தாற்கள்

209. மூணாவது திரம் - மூணாவது விசை (டி376:)

210. “Towards the end of August 1760 an English fleet appeared on the coast. With its cooperation, Coote proceeded to , an active investment of Pondicherry. He soon captured all its outposts and instituted a strict blockade. After more than four months, Lally sick and worn out with despair and exhaustion surrendered unconditionally (January 1761)" - (The Maratha Supremacy, Page 335)

211. சீர்மைக்கு - இங்கிலாந்துக்கு (போ. வ. ச. பக். 113)

212. மேஸ்தர் டுப் பிரி - மாஸ்டர் டுப்ளிகேஸ் (போ. வ. ச. பக். 113) Mr. Josiah Dய Pre -(Srinivasan, Page 284)

213. தினமும் - வேலையும் (போ. வ. ச. பக். 113)

214. டபீர் என்ற சொற்குச் செயலர் என்பது பொருள். இவர் இயற்பெயர் நாரோ பண்டிதர் என்பதாகும் (சுப்பிரமணியன், பக்கம் 78, அடிக்குறிப்பு)