பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

127



நவாபுக்கு தஞ்சாவூர் மஹா ஹாஜா பண்ணின உபகாரத்தையும் தங்களுக்கு காண்பிவித்த சினேகத்தையும் யோசித்துப் பார்த்து நவாபுக்குச் சொல்ல வேண்டிய விதப்படிக்குச் சொல்லி பேஷ்க்க்ஷ் நிலுவைக்கும் இனி மேலைக்கு நடக்க வேண்டியத்துக்கும் ஒருதிட்டம் பண்ணி அது இங்கிலீஸ்காறர் மாரிபத் தாய் செலுத்துகிறதென்று தீர்ப்புபண்ணி இருவருக்கும் பூதலூரிலே பேட்டி பண்ணி வைத்து சமாதானம் பண்ணி வைத்தார்கள்.'

அப்போது துளஜா மஹா ஹாஜாவுக்கு ரெண்டாவதுபூரீ றாஜகுமார பாயி சாயிபுக்கு ஒரு கன்னிகை பிறந்துது.

முன்னாலே சென்றுபோன சவவாயி சாஜிறாஜா பிழைத்திருக்கிறா னென்று ரூபியுடைய வெள்ளாட்டி மகன்' சுபானி என்கிறவனுக்கு தஞ்சாவூர் றாச்சியம் பிறாப்த்தி யாகும்படியாய் பண்ணின? கோயாஜி காட்டிகே," ஒடிப் போயிருந்தவன், அரியலூர் காட்டிலே ஒரு கிறாமத்திலே வந்து யிருக்கிறா னென்கிற சேதி மஹா ஹாஜாவுக்குத் தெரிஞ்சு ரெண்டு பேர் ஆப்த்தமா யிருக் கப்பட்ட சிபாயி அவாளுடனே கொஞ்சம் செனமும் அனுப்பிவித்து அந்த கோயாஜி காட்டிகேயைக் கொண் ணு போட்டார்கள்.

இந்தப்படி பிறதாப சிம்ம மஹா ஹாஜா றாச்சிய பாரம் பண்ணு கிற போது உத்தமமாய் புண்ணிய கீர்த்தி விஸ்தரிச்சுது. அந்த கீர்த்தியை சிறுது சொல்லுகிறோம். உத்தர தேசம் சாத்தாரா புனா அவரங்கா பாது வரைக்கும், கிழக்கே அச்சி?" வியாபாணம்" கண்டிதேசம் சிங்கள தீபம் வரைக்கும், தெற்கே மலையாளம் கொளம்பு கொச்சி, மேற்க்கே பூரீறங்கபட்டனம் பிதலுார் தேசம் குத்தி கிருஷ்ணாதீரம் பண்ணாளகட்

215. “The Nawab demanded from Pratap Singh all arrears of tribute. Lord Pigot the governor of Madras deputed Mr. Josiah Du Pre, the Second in Council to settle the terms of the tribute payable to the Nawab. Accordingly it was agreed that the Raja should pay by five instalments in about 2 years, 22 lakhs of rupees in discharge of the outstanding arrears with a further sum of 14 lakhs as a present to the Nawab and also an annual tribute of four lakhs afterwards”- (Srinivasan, Page 284)

திருமுடி சேதுராமன் சுவடியில், சகம் 1880 ஆம் வருஷம் கிறிஸ்து 1758 வருஷத்துக்கு தமிழ் வெகுதான்ய வருஷம் முதல் சுவல்பமாய் பேஷ்கஷ பணம் தங்கள் மூலமாய் கொடுத்துவரும் படி சமாதானம் செய்தார்' என்றுளது (பக். 74) == 215. ரூபியுடைய வெள்ளாட்டி மகன் - குப்பி என்ற வேலைக்காரியின் மகன் (போ. வ. ச. பக். 114) + z 17. பிராப்தி யாகும்படியாய்ப் பண்ணின - அடைய ஏற்பாடு செய்து ஒடிப்போன (போ. வ. ச. பக், 114)

218. கோயாஜி காட்டிகே - கோதாஜி காண்டிகா (போ. வ. ச. பக். 144): Koyaji Ghangte (Srinivasan, Page 279)

219. அச்சி - சமுத்திர மத்திய பிரதேசத்திலுள்ள அச்சி (போ. வ. ச. பக். 114) 220. வியாபாணம் - யாழ்ப்பாணம் (டிெ)