பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு (மெக்கன்சி சுவடி எண் 3180; எம் 79)

பூரீமது போசலெ வம்சத்தின் ஆதிமூலபுருஷர் பூரீமன் நாராய

(1) ணன் அவர் பரம்பரையாய் பூர் சூரிய ருையணன் அவரிடத்தி 蠶 லுண்டானவர் மனு மனுவுடைய சந்ததியில் யிசுவாக்கு" Աք அந்த ருஜாவினுடைய சந்ததிகள் கிறேதாயுகம் திறேதாயுகம் துவாபரயுகம்” யிந்த மூணுயுகத்திலேயும் பிறக்கியாதியான புண்ணியசாலிக ளான ருஜாக்களா யிருந்தார்கள். அந்த வம்சத்தில் யிப்போ கலியுகத்தில் ஸெம்பு பறுவத" பிருந்தத்தில் மஹருஷ" தேசாதிபதி சவுரிய அவதாரிய

1. 'போன்ஸ்லே வமிசம்' என்று போ. வ. சவில் உள்ளது.

வைத்தீசுவரன் கோயில் தீர்த்தக்குளக்கரை மண்டபத்தில் சகாப்தம் 1892 க்கும் 1689 க்கும் உரிய துளசா காலத்திய கல்வெட்டுக்களில் போஸ்லே போஸால என்று இவ்வமிசம் குறிக்கப்பட்டுள்ளது. (திரு செ. ராசு அவர்களிடம் உள்ள கையெழுத்துப் பிரதி எண் 59, எண் 60). வெண்ணாற்றங் கரையிலுள்ள இரண்டாம் சிவாஜி காலத்துப் 'பூஷண பத்திரம் ஒன்றில் ரீமத் போஸல குலோத் பவ' என்றுள்ளது (மோடி தமிழாக்கம் 5 - பக்கம் 236). திரு இராசு அவர்கள் புதிப்பித்த "தஞ்சை மராட்டியர் செப்பேடுகள் 50' என்ற நூலிலும் பக்கம் 77, 106, 185 இல் போசலகுலம் என்றும், பக்கம் 35, 129 இல் போசலவமிசம் என்றும், பக்கம் 98 இல் போசல வமிச திலகர் என் றும், பக்கம் 83, 90 இல் போசல திசுவரன் என்றும் வருதல் காணப்பெறும்.

ஆனால், டஃப் என்பார் இவர்களை 'போன்ஸ்லே' என்றே கூறுகிறார் (பக்கம் 43).

உதையபுரத்தில் லக்ஷ்மண்சிங்கு என்றொருவர் இருந்தார். அவருடைய பெயரர் ஸஜனாசிங்கு; அவர் வழியில் வந்தவர் ஷாஹாஜிபோஸ்லே, இவருடைய முன்னோர்களில் ஒருவர் தேவராஜ்ஜி என்பவர் ஆவர். அவர் உதையபுரத்து ராணாவுடன் சண்டையிட்டுத் தக்கானத்துக்கு ஓடினார். அங்கே அவரும் அவர் வழியினரும் போஸ்லே என்று வழங்கப்படலாயினர் (கி. பர். பக்கம் 112113). போஸ்லே என்பது கோஸ்லே (ஒரிடம்) என்றதினின்று வந்தது என்று கூறப்படுகிறது (கி.பா. பக்கம் 133 அடிக்குறிப்பு).

2. சூரியனிடத்தில் தோன்றியவர் மனு:

"மண்டிலஞ்சேர் செய்ய தனியாழித் தேரோனும் -- ಣggiat சிந்தனை யாவிற்கு முற்றத் திருத்தேரின் மைந்தனை பூர்ந்த மறவோனும் - விக்கிரம சோழனுலா (வரி 5-8). (தனியாழித் தேரோன் - சூரியன். தேரின் மைந்தனையூர்ந்த மறவோன் - மனு). இராசராச சோழனுலா வரி 3-5, கலிங்கத்துப்பரணி இராசபாரம்பரியம் 10-ஆகியவற்றிலும் சூரியன்மகன் மனு என்று கூறப்பட்டுள்ளது. + 3. யிகடிவாக்கு - இட்சுவாகு. மனுவின் மகன் இக்குவாகு என்று கலிங்கத்துப்பரணி, தாழிசை 10. பகரும். 4. கிறேதாயுகம்-கிருதயுகம் 5. ஸெம்பு பறுவதம் - செம்பு பர்வதம், இது சதாரா மாவட்டத்திலுள்ளது (சென், பக்கம் 2 இல் அடிக்குறிப்பு எண் 2) 6. மஹருஷ-மாருஷ்ட (டி3119)