பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

152

தஞ்சை மராட்டிய

தம்முடைய நிஜத்துவ மென்கிற ஆயுதத்தினாலேயும் அந்த வலையைச் சேதிச் சுப்போட்டு அந்த வலைக்கு நீங்கலாய் அவருடைய கீற்தியும் மேன்மையும் முன்னிருந்ததைப்பார்க்க அதிகமாக சென்னப்பட்டணம் முதல் சீமை வரைக்கு மிருக்கிற இங்கிலிசு சற்தார்கள் சறபோஜி மஹா ருஜாவுடைய நிசத்துவக்கு சந்தேகமில்லை என்று எண்ணிக்கையாக எண்ணப்பட்ட முகாந்திரத்துக்கு மேஸ்த்தர். டுரியன் சாயபு மேஸ்தர் செரிக்கு சாயபு மேஸ்தர் சுவாற்சு சாயபுடைய கையெழுத்துக் கடுதாசிகளே யேதுவாக யிருந்துது.'[1] இந்த மக்களவுட்டு சாயபுக்கு சங்கட்ட பிறாப்த்தியான[2] அச்சமையத்திலே மக்களவுட்டும் அவன் பெண்சாதியும் தங்களுடைய கஸ்த்தியை மஹா ருஜாவுக்குத் தெரிய பண்ணி பிறார்த்தினை பண்ணினபோது மஹா ருஜா முன்னாலே தம்முடைய ருட்சிய சுவதந்திரம் சிறிது மக்களவுட்டுக்கு அறியப்பண்ணிவித்த உபகாரத் துக்காகவும் தம்முடைய மேன்மைக்காகவும் மேஸ்தரிசு"[3] மக்களவுட்டு பிறார்த் தனையைத் தொட்டும் இப்போ மக்களவுட்டு பண்ணின அபகாரத்தை கூட நினையாமல்படிக்கு அவாளுக்கு பதினாயிரம் றுபாயிக்கு அதிகமாய் கொடுத்தார்.

இதுக்கு முன்னே மஹா றாஜா அவர்கள் கல்லியாணம் பண்ணியிருந்த ரெண்டாவது அஹில்லியா பாயி சாயபு கெற்பத்திலே கன்னியா றெத்தினம்’ செனணமாச்சுது. அதுக்கு சுலட்சணாபாயி சாயபு என்று பேர் வைத்தார்கள்.

அப்பால் கும்பினியார் முன்னாலே அமறசிங்கு பண்ணின ருட்சிய பாரத்தில் தஞ்சாவூர் தேசத்தில் அன்னியாயம் நடந்திருந்தபடியினாலே"[4] செம்மையான மாற்கமாய் ஞாயம் பண்ணுகிறோமென்று மஹா ஹாஜாவுக்குத்


  1. 11. இங்குக் கூறப்பட்டதன் சுருக்கம் பின்வருமாறு: மக்லோட் சரியாக நடந்து கொள்ளவில்லை. இதுபற்றி 27-5-1800இல் டுரியன்துரை வழி கம்பெனியார்க்கு சரபோஜி எழுதினார். கம்பெனியார் ஆணையின்படி மகாராஜா தத்தாஜி அப்பாவையும் மேலும் இரண்டொரு வரையும் அனுப்பினார். விசாரணை நடந்தது. சம்பெனியார் சாதிப்பற்று இன்றி மக்லோட் பேரில் குற்றம் உண்மையை வெளிப்ப்டுத்தினார்கள். உண்மையை அறியப் பயன்பட்டவை டுரியன், செரிக்கு, ஸ்வார்ஷா ஆகியோர்களுடைய எழுத்துச் சான்றுகளேயாகும்.
  2. 11.அ. சங்கட்ட பிராப்தி - துன்பம் அடைந்தமை மக்லோட் வேலை நீக்கம் செய்யப்பட்டமை 12. Gucciosa - Mistress (Mrs.)
  3. 13. கன்னியா ரெத்தினம் - பெண் குழந்தை (போ. வ. ச. 135 .قبه)
  4. 14. தஞ்சாவூர் தேசத்தில் அன்னியாயம் நடந்திருந்தபடியினாலே - தஞ்சை ராஜ்யம் நன்றாய்ப்பரி பாலிக்கப்படாத காரணத்தினாலே (போ. வ. ச. பக். 135). எனினும் இதுபற்றிப் பின் வரு வனற்றை ஒப்புநோக்குக:

“A liberal prince, no doubt, he worked for the welfare his people. Anxious to promote cultivation, he granted an increase of the ryot's share of the produce”, suspended the collection of duties on grain exported for the relief of the famine stricken Ramnad in 1794, set up a court and introduced individual settlement in the place of the village settlement"- (Rajayyan, Page 106) * சிவராயரைப்பார்த்துத் தஞ்சாவூர் சம்ஸ்தானத்தில் ஏற்பாடாயிருக்கிற குடிவாரம் எவ்வளவு என்று கேட்க, 'அநேக நாளாய்க் குடிமக்கள் 100க்கு 30 வாரம் பெறுகின்றனர்” என்று பதில்