பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மன்னர் வரலாறு

173


இந்த ஷாஜி சகம் 1633இல் இறந்து போனார்.

ஷாஜியின் முதல் தம்பி மூன்றாவது சரபோஜி அரசாளத் தொடங்கினார். இவரது மனைவியர், சுலக்ஷணா பாயி, அபரூப பாயி, ராஜஸ்பாயி எனும் மூவர் ஆவர்.

இவர் காலத்தில் அல்லியேதில்ஷா ஆட்சியிலிருந்து வந்த பிரபுக்கள் சிலருக்கு ஆதரவளித்துக் காப்பாற்றினார்.

இவருடைய தம்பி துக்கோஜியின் மனைவியர் அருனாபாயி, ராஜ குமாராபாயி, மோகனா பாயி, மஹறினாபாயி. லக்ஷ-ம் பாயி எனும் அவர் ஆவர்.

துக்கோஜியால் சேர்த்துக்கொள்ளப் பெற்ற மனைவியர் அறுவரில் ஐவர் நாயக்கர் கூட்டம்; ஒருவர் மராட்டியர்; இம் மராட்டியரைக் கத்திக் கல்யாணம் செய்து கொண்டார். இவர் பெயர் அன்னபூரணாபாயி. இவர் வயிற்றில் சகம் 1665இல் பிரதாப சிம்மர் தோன்றினார். சாமாபாயி என்ற பெண்னும் பிறந்தது.

மேலே கூறிய துக்கோஜியின் மகன் ஐந்தாவது ஏகோஜி ராஜாவெனப்பட்ட பாவா சாயபுக்குச் சுஜான்பாயி, ஜயந்திபாயி, சக்வார்பாயி, சுகுமார் பாயி, கிரிஜாபாயி, பார்வதிபாயி ஆக அறுவர் மனைவியராவர். இவர்கள் தவிரச் சேர்த்துக் கொள்ளப்பட்டவர் மூவர் மனைவியர்.

பிரதாப சிங்கருக்கு, அஹல்யாபாயி, யமுனாபாயி, சக்வார்பாயி, துரெள பதிபாயி, எசவந்த் பாயி ஆக மனைவியர் ஐவர். இவர் சேர்த்துக்கொண்ட மனைவியர் எழுவர்.

பிரதாப சிங்கருடைய தங்கை சாமாபாயி, மல்லார்ஜி காடேராவுக்குத் திருமணம் செய்விக்கப்பட்டார்.

துக்கோஜியின் மகன் நாநாசாயபுக்கு அப்புசாயபு என்றொரு மகன்; அப்புசாயபுக்கு நாநாசாயபு என்று ஒரு பிள்ளை.

சரபோஜிக்கும் துக்கோஜிக்கும் வீட்டுச் சண்டையேற்பட்டது. ஆகவே துக்கோஜி சிறிது ஆட்சிப்பகுதியைப்பெற்றுக் கொண்டு மகாதேவி பட்டனத்தில் தன் குடும்பத்துடன் தங்கியிருந்தார்.

சரபோஜியின் இரண்டாவது மனைவி அபருபாபாயிக்குச் சில கெட்ட பெண்களின் நட்புக்கிடைத்தது. சரபோஜிக்குப் பிள்ளைகள் இல்லை. சரபோஜியின் தம்பி துக்கோஜிக்கோ பிள்ளைகளுண்டு. ஆகவே ஆட்சி துக்கோஜியின் மக்களுக்குத் தானே சேரும் என்று அபரூபாபாயிக்குக்கூறினர். பொறாமைத்தி மூளப்பெற்ற அபரூபா பாயி தான் கருவுற்றதாகக் கூறி வேறொருவருடைய குழந்தையைக் கொணர்ந்து தான் மகப்பேறடைந்ததாகவும் கூறி அந்தப் பிள்ளைக்குச் சவாயி ஷாஜி என்று பேரும் வைத்தார்கள்.