பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மன்னர் வரலாறு

175


மிகுந்த பற்றுக் கொண்ட காசிம் தன் தமையனுடைய சூழ்ச்சிகளையெல்லாம் அரசரிடம் தெரிவித்தார். இதனால் அரசர் சயிதுவின் மகள் திருமணத்தைத் திருவிடைமருதூரில் வைத்துக் கொள்ளச் செய்தார். திருமணமும் நடந்தது. மறு நாள் வழக்கப்படி கோட்டையின் வாசல் திறக்கும்போது சையிது சேனைகளுடனே கோட்டையில் நுழைந்து கோட்டையைப் பிடிப்பது என்று திட்டமிட்டிருந்தார். இத்திட்டத்தைச் சயிதுவின் தம்பி காசிம் வழி உணர்ந்த அரசர், மல்லார்ஜிகாடே, அன்னப்பா சேட்டிகை மானோஜிராவ் முதலானவர்களோடு கலந்து சையிதை அழைத்து வரச்செய்து கொல்லச் செய்தார். பின்னர் அன்னப்பா சேட்டிகை சர்க்கேல் சேனாபதி பதவியிலும். மல்லாற்ஜி காடேராவ் கில்லேதார் பதவியிலும் அமர்த்தப்பட்டனர்.

பின் அர்சர் இராமேசுவரம் சென்றுவந்தார். இராமநாதபுரத்து அரசர் தஞ்சை அரசரைத் தன் கோட்டைக்கு அழைத்துச் சென்று வரவேற்றார்.

திருச்சியைக்கைப்பற்றியசந்தாசாயாபு. தஞ்சையை முற்றுகையிட்டு, ஆற்காட்டிலிருந்து உடன்வந்த ஸஃப்தர்அலியிடம், தஞ்சை அரசை ஒப்பித்துத்தான் திருச்சிக்குச் சென்றுவிட்டார். ஸஃப்தர்அலியும் திருவையாற்றுக்கு மேற்கே அணையொன்று கட்டி இரண்டாண்டுக்காலம் இருந்தார்.

பிரதாப சிம்மர் சாதாராவில் இருந்த ஷாஹாவின் உதவியை நாடினார். ஷாஹருபாயியின் புதல்வன் ரகோஜியையும் பத்தேசிங்கையும் அறுபதினாயிரம் குதிரைகள் கொண்ட படையுடன் அனுப்பினார். இதனை யறிந்ததும் ஸஃப்தர்அலி திருச்சிக்கு ஓடினார். ரகோஜியும் பத்தேசிங்கும் திருச்சியைத் தாக்கிப் பிடித்துக்கொண்டு, அதனை முரார்ஜிராவ் கோர்படேயிடம் ஒப்புவித்துச் சந்தாசாயபுவைச் சிறைப்படுத்திக்கொண்டு சதாராவுக்குச் சென்றார்கள்'

அன்னப்ப சேட்டிகை சரிவர நடந்து கொள்ளாமையினால் . சர்க்கேல் வேலையிலிருந்து நீக்கப்பட்டார்.

திருச்சியிலிருந்த முரார்ஜிகோர்படே தஞ்சாவூரைத் தனக்குரியதாக ஆக்க நினைத்துக் கொண்டு, தன் அமைச்சர் இன்னிசுகானை ஒரு படையுடன் அனுப் பினார். பிரதாப சிங்கர் தன் சேனைத் தலைவர் மானோஜிராவை ஒரு படையுடன் அனுப்பினார்; இன்னிசுகான் ஒடி ஒளிந்து கொண்டார்.

பின்னர்ச் சந்தா சாயபுவின் நண்பன் மகம்மது அரபு என்பார். பிரெஞ் சுக்காரருடைய உதவியைப் பெற்று இராக்காலங்களில் கொள்ளையடித்து வந்த மையை அறிந்த பிரதாபசிங்கர், மல்லார்ஜிகாடேராவ், மானோஜிராவ் ஆகியவர்களை அனுப்ப அவர்கள் முகம்மது அரபைக் கொன்று அவருடைய விருதுகளையும் கொண்டு வந்தனர்.

தீவுக்கோட்டை (தேவிக்கோட்டை)யை ஆங்கிலேயர் பிடித்துக்கொள்ள வந்து தோற்றனர். இரண்டாம் விசை ஆங்கிலேயர் படையெடுத்து வந்த பொழுது, தஞ்சாவூர்ப் படைகள் கொள்ளிடத்து ஆற்று மணலிலே அகப்பட்டுத்